Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாசினிமா பிரபலத்தை டேட்டிங் செய்கிறாரா தனுஷ்? உண்மை என்ன?ஒன்றாக வெளியான புகைப்படத்தால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

சினிமா பிரபலத்தை டேட்டிங் செய்கிறாரா தனுஷ்? உண்மை என்ன?ஒன்றாக வெளியான புகைப்படத்தால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை ஆரம்பிக்கட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது .

- Advertisement -

வழக்கமாகவே சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி விளையாடும் போட்டிகளில் திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் பெருமளவில் போட்டியை நேரில் கண்ட ரசித்து வருகின்றனர் . நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் போட்டியை காண வந்திருந்தனர் .

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது மனைவி நயந்தாரா இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் நேற்று போட்டியை காண வந்திருந்தனர் . இதில் தனுசுடன் பிரபல சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனாவும் வந்திருக்கிறார் .

- Advertisement -

இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அவர்களின் மகள் ஆவார் . பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது . இவரும் தனுசும் நேற்று போட்டியை ஒன்றாக கண்டுகளித்தனர் .

- Advertisement -

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ள நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி ரசிகர்களிடமும் சினிமா வட்டாரங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.ஆனால் இது பொய்யான தகவல் மற்றும் வதந்தி என்று கூறப்படுகிறது.

கல்பாத்தி அர்ச்சணா ஏற்கனவே தனுசை வைத்து அனேகன் என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது தனுசை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். மேலும் நேற்று இருவரும் தனி தனியாக தங்களது நண்பர்களுடன் தான் போட்டியை பார்க்க வந்திருக்கிறார்கள்.

வந்த இடத்தில் எதிர்சையாக, அருகில் அமரும் வகையில் சூழ்நிலை ஏற்பட்டது. ஏற்கனவே நண்பர்கள் என்பதால் தனுஷ் மற்றும் அர்ச்சணா இருவரும் பேசி கொண்டிருந்தனர். ஆனால் வழக்கம் போல் நம்மவர்கள் இந்த புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி கதையை கட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular