Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஇது என்னடா புது புரளியா இருக்கு ……சிவகார்த்திகேயன் தந்தையுடைய வாழ்க்கை கதை தான் ஜெய்லர் திரைப்படமா?...

இது என்னடா புது புரளியா இருக்கு ……சிவகார்த்திகேயன் தந்தையுடைய வாழ்க்கை கதை தான் ஜெய்லர் திரைப்படமா? கேமியோ ரோலிலும் நடிக்கிறாரா எஸ்கே ? உண்மை நிலவரம் என்ன

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெய்லர் . இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலிப் குமார் இயக்கியிருக்கிறார் . வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது . இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து நிலையில் அவர் தற்போது லால் சலாம் திரைப்படத்தில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார் .

- Advertisement -

அண்ணாத்த மற்றும் தர்பார் திரைப்படங்களின் தோல்வியை தொடர்ந்து தனது படங்களில் மிகவும் கவனத்துடன் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் படம் தான் ஜெய்லர். இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தமன்னா ஜாக்கி சராஃப் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கன்னட திரைப்பட நடிகர் சிவராஜ்குமார் யோகி பாபு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் . அனிருத் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு மற்றும் கிலிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது . அந்த வீடியோ ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது . சூப்பர் ஸ்டார் எதிர்பார்த்தது போலவே ஒரு தரமான படத்தை நெல்சன் கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . மேலும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காகவும் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளிய ஆவதற்காகவும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

- Advertisement -

தற்போது இந்த திரைப்படத்தைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவா கார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி.. மேலும் ஜெயிலர் திரைப்படம் சிவா கார்த்திகேயனின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட கதை எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன . இந்த செய்திகளில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை . இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இவற்றைப் பற்றிய வெளியிடவில்லை . இதுபோன்ற செய்திகள் பல நேரங்களில் வதந்திகளாகவும் இருக்கலாம் என்ன சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

- Advertisement -

Most Popular