Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாநயன் தாராவுக்கு டப் கொடுத்த பிரியா பவானி சங்கர்.. ஒரே ஆண்டில் இத்தனை படமா?

நயன் தாராவுக்கு டப் கொடுத்த பிரியா பவானி சங்கர்.. ஒரே ஆண்டில் இத்தனை படமா?

கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்பத்தில் புதிய தலைமுறையில் செய்தி தொகுப்பாளினியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர் நடித்த முதல் தொடரில் இவருடைய நடிப்பிற்கும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்தது. அந்தத் தொடரில் ஒரு குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் அமைந்திருந்தது. அந்தக் கதைக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருந்தார் என்பதும் ரசிகர்களின் கருத்தாகும்.

இப்படி தொலைக்காட்சியில் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபோவுக்கு ஜோடியாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம் ,ஓ மன பெண்ணே, மான்ஸ்டர், யானை திருச்சிற்றம்பலம் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் துணை நடிகை ஆகவும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இவர் நடித்த பல திரைப்படங்கள் வெளியானதே தெரியாத அளவிற்கு போய் இருக்கிறது. ஆனாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதே. அதற்கு எடுத்துக்காட்டாக இந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக படங்களை நடித்த கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் இருக்கிறார் என்பதை ஆகும்.

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி நடித்த அகிலன் ,நடிகர் சிம்பு நடித்த 10 தல ,நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் ,நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்த பொம்மை ஆகிய திரைப்படங்களில் எல்லாம் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் அருள்நிதி நடித்த டிமான்டி காலனி என்ற திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகம் வர இருக்கிறது. அந்த திரைப்படத்திலும் நடிகை பிரியா பவானி சங்கர் தான் கதாநாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வரிக்குதிரை இந்தியன் டு போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் விஷாலின் உடைய 34 வது திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கு ப்ரீயா பவானி சங்கரை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது .

இந்த வருடத்தில் மட்டுமே பிரியா பவானி சங்கர் இதுவரை 8 தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் முதன் முதலில் கல்யாணம் காமினி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமா விற்கும் அறிமுகமாகி இருக்கிறார்

நடிகை பிரியா பவானி சங்கர் கூடிய விரைவில் இவர் முதன்மை நடிகைகளில் ஒருவராக ஆகிவிடுவார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Most Popular