Thursday, February 6, 2025
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிடாமுயற்சியைக் கைவிட்ட அஜித்.. இவங்கள நம்ப முடியாது என்ற கடுப்பில் அடுத்தப் படமான குட் பேட்...

விடாமுயற்சியைக் கைவிட்ட அஜித்.. இவங்கள நம்ப முடியாது என்ற கடுப்பில் அடுத்தப் படமான குட் பேட் அக்லி ஷூட்டிங் துவங்க உத்தரவு.. !

நடிகர் அஜித்குமார் துணிவு படத்திற்கு பிறகு துவங்கிய விடாமுயற்சி ஷூட்டிங் என்ன ஆனது என்ற சரியான தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகாமல் இருக்கிறது. சில வாரங்கள் முன்னர் படப்பிடிப்பில் நடந்த விபத்தைக் காட்டி படக்குழுவின் பணிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அஜித் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

தற்போது அஜித்தே விடாமுயற்சி மேல் கடுப்பாகி நகர்ந்து விட்டாராம். லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் சூழலில் விடாமுயற்சி உருவாக்கப்பட்டு வந்தது. இடையில் லைகா நிறுவனம் சுதப்பலால் இப்படம் எந்த ஒரு அசைவும் இல்லாமல் தவித்தது.

பெரிய பொருளாதார நெருக்கடி காரணமாக லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தை நிறுத்தி வைத்துவிட்டு, ரஜினியை வைத்துத் தயாரிக்கும் வேட்டையன் படத்தை மட்டும் தொடர்ந்தது. பிறகு அந்தப் படத்தின் வியாபாரத்தை வைத்து விடாமுயற்சி படத்தை நகர்த்த திட்டமிட்டு இருந்தனர். தேர்தல் கழித்து துவங்கவிருந்த ஷூட்டிங் இன்னுமும் அப்படியே இருப்பதால் நடிகர் அஜித்குமார் மிகவும் கோபமாகி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே ஓரளவு ஷூட்டிங் முடிக்கப்பட்ட விடாமுயற்சி படத்தில் மீதம் இருக்கும் காட்சிகளை மே மாதத்தில் முடித்துவிட்டு அவரின் அடுத்தப் படமான குட் பேட் அக்லியின் ஷூட்டிங் பணிகளைத் துவங்குவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் லைகா நிறுவனத்தின் மெத்தனப் போக்கால் விடாமுயற்சி படத்தை விட்டுவிட்டு, மே மாதமே அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க சிக்னல் கொடுத்துவிட்டார்.

- Advertisement -

மே 10ஆம் தேதி போல ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. மைத்ரி மூவிஸ் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். ஏற்கனவே அவர்கள் இப்படத்துக்கான வெளிநாட்டு உரிமத்தையும் 22 கோடிக்கு வியாபாரம் செய்து விட்டனர். அண்மையில் இயக்குனர் ஆதிக், ப்ரீ புரொடக்ஷன் பணிகளைப் பார்த்து வருகிறார். தெலுங்கில் அமர்க்களமான நடனத்தைப் போட்டு பெரிய கவனத்தை ஈர்த்த ஶ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மீதம் சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular