Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா"மொய்தீன் பாய் வந்துட்டாரு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் " - சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திரம்...

“மொய்தீன் பாய் வந்துட்டாரு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் ” – சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திரம் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் !

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த் . தற்போது ஜெய்லர் படப்பிடிப்பில் மும்பரமாக இருந்து வருகிறார் . நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி மாதம் வெளியாக இருக்கிறது . இத்தனை படத்தில் ரஜினி தனது போர்ஷனை முடித்து கொடுத்து விட்டார் . பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மட்டுமே பாக்கி இருப்பதாக படக்குழுவினரின் தரப்பு தெரிவித்து இருக்கிறது இதன் காரணமாக தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு பரபரப்பாக தயாராகி வருகிறார் சூப்பர் ஸ்டார். அதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது . அதன்படி இன்று சூப்பர் ஸ்டார் இன் லால் சலாம் திரைப்படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது .

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் லால் சலாம் . இந்தத் திரைப்படத்தினை சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார் . இவர் 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . மேலும் வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்களைப் பற்றிய சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தையும் இயக்கியிருக்கிறார் . தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஐஸ்வர்யா இயக்கி வரும் திரைப்படம் தான் சலாம் .

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த
திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையை வைத்திருக்கிறார் . இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன . தற்போது ஜெய் நகர் திரைப்படத்தில் தனக்கான காட்சிகளை சூப்பர் ஸ்டார் முடித்து விட்டதால் தனது மக்கள் இயக்கம் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது படத்துக்கு போதி அறிவிக்கப்பட்டது ஆனால் அவரது கதாபாத்திரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதால் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் லைக்கா நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அதன் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தையும் இன்று வெளியிட்டுள்ளது

- Advertisement -

பாட்ஷா திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தத் திரைப்படத்தில் முஸ்லிமாக நடிக்க இருக்கிறார் . அவரது நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . அதனைத் தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்திலும் முஸ்லிமாக நடிக்க இருப்பதால் இந்தத் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் . மாணிக் பாட்ஷாவாக அந்த திரைப்படத்தில் நடித்த ரஜினிகாந்த் தனது மகள் இயக்கம் திரைப்படத்தில் மைதீன் பாயாக நடிக்க இருக்கிறார் . தொப்பி மற்றும் சபாரி சூட் அணிந்த ரஜினிகாந்தின் லால் சலாம் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது

- Advertisement -

சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்ற வாசகத்துடன் வெளியாகி இருக்கும் அந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது . இந்தத் திரைப்படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ரஜினியின் கதாபாத்திரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும் என படக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . விரைவிலேயே இந்த திரைப்படத்திற்கான வெளியிட்டு தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது நான் சலாம் திரைப்படமும் இந்த வருடமே வெளியானால் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு புதிய திரைப்படங்களை ஒரே வருடத்தில் கண்ட மகிழ்ச்சி அவரது ரசிகர்களுக்கு கிடைக்கும்

Most Popular