Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா"வெங்கட் பிரபுவின் மெகா ஹிட் வெற்றி படத்தின் கதை அவருடையது இல்லையா",,,,? பிரபல சினிமா பத்திரிகையாளர்...

“வெங்கட் பிரபுவின் மெகா ஹிட் வெற்றி படத்தின் கதை அவருடையது இல்லையா”,,,,? பிரபல சினிமா பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! உண்மை என்ன ?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து சரோஜா கோவா மங்காத்தா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் . இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இந்தப் படம் சிம்புவுக்கு மட்டுமல்லாது வெங்கட் பிரபுவுக்கும் ஒரு ரிஎண்ட்ரி கொடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

ஒரு ஹாலிவுட் திரைப்பட வானியல் டைம் லூப் முறையில் கதைக்களம் அமைக்கப்பட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுத்தது இந்த திரைப்படம். 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த எஸ்டிஆர் இந்த திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார் என்றால் அதை மிகையாகாது. திரைப்படத்தில் சிம்பு உடன் எஸ்ஜே சூரியா ஒய்ஜி மகேந்திரன் மற்றும் பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தில் பலரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கதை அமைப்பு மற்றும் திரைக்கதை ஆகியவற்றை வெகுவாக பாராட்டினர். ஒரு புதிய கதை களத்தை மிகவும் தேர்ந்த முறையில் அவர் கையாண்ட விதம் குறித்து திரை விமர்சகர்களும் ரசிகர்களும் அவரை வெகுவாக பாராட்டினர் . இந்தத் திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தன இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றிய ஒரு புதிய செய்தி வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது . பிரபல இணையதள செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி இந்தத் திரைப்படத்தைப் பற்றிய அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்றிணை பகிர்ந்திருக்கிறார் .

- Advertisement -

அந்த செய்தியின் படி இந்தத் திரைப்படத்தின் ஒரு வரி கதை மட்டும் தான் வெங்கட் பிரபு வைத்திருந்தாராம் . வெங்கட் பிரபுவிடம் இருந்த ஒரு வரி கதை ஒரு கொலை வழியை முஸ்லிம் இளைஞர் மீது போடுகிறார்கள் . அதிலிருந்து அவர் தப்பித்து எப்படி உண்மையை வெளிக்கொண்டு வருகிறார் என்பதுதான் வெங்கட் பிரபுவிடம் இருந்த கதை . ஆனால் நாம் திரையில் கண்ட மாநாடு கதை என்பது லியாகத் அலி என்று எழுத்தாளர் உடையது என தெரிவித்திருக்கிறார் பத்திரிக்கையாளர் பிஸ்மி .

- Advertisement -

ஒரு இஸ்லாமிய கதை களத்தில் இந்த திரைப்படம் உருவாக இருந்ததால் கதை விவாதத்திற்கு லியாக்கத் அலி என்பவரை அழைத்திருக்கிறார் வெங்கட் பிரபு நாம் திரையில் கண்ட மாநாடு என்ற திரைப்படத்தின் முழு கதையையும் லியாகத் அலி தான் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார் பத்திரிக்கையாளர் . மேலும் இந்த முழு கதையும் தயாரானதும் அவரை கழற்றி விட்டு விட்டார்கள் என குற்றம் சாட்டியிருக்கிறார் பத்திரிக்கையாளர் பிஸ்மி . அந்த லியாக்கத் அலி என்பவருக்கு எந்த ஒரு கிரெடிட் கொடுக்கப்படவில்லை எனவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார் பத்திரிகையாளர் பிஸ்மி . இந்த செய்தி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . அவர் கூறிய செய்தியில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை . ஆனால் இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது .

Most Popular