Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமா"சங்கமே அபராதத்தில் தாண்டா ஓடுது" ……. நடிகர் சங்கத்தின் இரங்கல் கூட்டத்தில் லியோ பட நடிகரின்...

“சங்கமே அபராதத்தில் தாண்டா ஓடுது” ……. நடிகர் சங்கத்தின் இரங்கல் கூட்டத்தில் லியோ பட நடிகரின் சர்ச்சைக்குரிய பேச்சு !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய் . இவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது . இத்திரைப்படத்தில் இவருடன் திரிஷா பிரியா ஆனந்த் அர்ஜுன் இயக்குனர் மிஷ்கின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர் . மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார் . அனிருத் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்

- Advertisement -

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்டப்பட படிப்புகள் சென்னையில் மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . அர்ஜுன் உடனான காட்சிகளில் நடித்து முடித்த தளபதி விஜய் தற்போது மன்சூர் ஐ காணுடன் ஆன காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் . பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன . அக்டோபர் மாதம் திரைப்படம் வெளியாக இருப்பதால் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா . அவரைப் போலவே நடிகர் மன்சூர் அலி காணும் ஒரு மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . விஜய் திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு பிரதான வில்லனாக நடித்தவர் மன்சூர் அலிகான் . அதன் பிறகு உள்ள நடிகரிலிருந்து மாறி காமெடி நடிகர் மற்றும் புரட்சித்திர நடிகர் என வெவ்வேறான கதாபாத்திரங்களில் அவர் நடித்துக் கொண்டிருந்தார் . இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் விஜயுடன் இணைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் .

- Advertisement -

சர்ச்சையான கருத்துக்களுக்கு பெயர் போன மன்சூர் அலிகான் சமீபத்தில் நடைபெற்ற இடங்கள் கூட்டத்திலும் நடிகர் சங்கம் துருப்பிடித்து கிடப்பதாக தனது வழக்கமான பாணியில் பேசியிருக்கிறார் . சமீபத்தில் மறைந்த நடிகர்கள் கஜேந்திரன் மயில்சாமி மற்றும் மனோபாலா ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் சென்னை தி நகரில் உள்ள தியாகராஜா மஹாலில் வைத்து நடைபெற்றது . இதில் கலந்துகொண்டு பேசிய மன்சூர் அலிகான் பெரிய நடிகர்களை குத்திக்காட்டி பேசியிருக்கிறார் .

- Advertisement -

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் நடிகர் மனோபாலா உடனான தனது நினைவுகள் பகிர்ந்து கொண்டார். மேலும் தொடர்ந்து பேசுகையில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது தான் நடிகர் சங்கம் என்ற ஒன்று இருப்பதே தெரிகிறது என்று தெரிவித்திருக்கிறார் . மேலும் பெரிய நடிகர்கள் 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் நடிகர் சங்கத்தை மறந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார் விஷால் நடிகர் சங்க தலைவராக பதவியேற்ற உடன் பல சலுகைகளை அறிவித்தார் ஆனால் எதையும் அவர் செயல்படுத்தவில்லை எனவும் கூறி இருக்கிறார் . 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் என சுட்டிக்காட்டியதால் மன்சூர் அலிகான் தற்போது விஜயுடன் தான் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் மறந்து விடக்கூடாது என விஜய் ரசிகர்கள் அவருக்கு சுட்டி காட்டி இருக்கின்றனர்

Most Popular