Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஅவனா நீ !!!ஆத்தாடி!!அது இது இல்ல ??- தெறிக்கவிடும் ஜெயிலர் வில்லன்

அவனா நீ !!!ஆத்தாடி!!அது இது இல்ல ??- தெறிக்கவிடும் ஜெயிலர் வில்லன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் சாதனை சரித்திரம் படைத்து வருகிறது! பலவிதமான விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கி விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் வானளாவிய வெற்றியுடன் முத்திரை பதித்து வருகிறது.

- Advertisement -

வசூல் சாதனையில் மார்தட்டிய முந்தைய படங்கள் எல்லாவற்றையும் ஓரங்கட்டி ,மே ஐ கம் இன் என்று “என் வழி தனி வழி” என்று பீடு நடை போட்டு முன்னேற்ற பாதையில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார் நிரந்தர சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த்

ரஜினியின் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதியின் படி பத்து பொருத்தங்களும் பக்காவாக பொருந்தி அமைந்திருக்கிறது ஜெயிலர்  திரைப்படம். ..
ரஜினிகாந்தின் ரசிகர்கள் உலகம் எங்கும் உள்ள தியேட்டர்களில் அதனைக் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

- Advertisement -

அதிலும் கொடூர வில்லனாக களம் இறங்கி இருக்கும் விநாயகத்தை நினைத்தால் நமக்குள் பயம் வருவது  என்னமோ உண்மை தான்!? ரஜினிகாந்தையே எதிர்த்து நின்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல..

- Advertisement -

ரஜினிகாந்துக்கு எதிரான சிறு வசனங்களை பேசினாலே, ரசிகர்கள் அவர்களை ஒரு வழி செய்து விடுவார்கள் ! அவர்களின் வீடுகளை கற்களால் அர்ச்சனை செய்து !?பச்சை வண்ண சொற்களில் வசைபாடி  விடுவார்கள்!? என்பதே இதுவரை இருந்த வரலாறு.

அதற்கு நேர்மறையாக ரஜினிகாந்தை எதிர்த்து வில்லனான விநாயகத்தின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் அதிகமான இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களால் தேடப்படும் மோஸ்ட் வான்டட் வில்லனாக  விநாயகம் மாறியுள்ளார்.

இவரை  ஜெயிலர்  திரைப்படத்தில் காணும் போது, இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று பலரது எண்ணங்களிலும் பளிச்சிட்டது உண்மை.ஏனென்றால் மலையாள படங்களில் விநாயகம் தெறிக்கவிடும் ஒரு நடிகர் மலையாள ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர்.

ஆனால் இவர் ஏற்கனவே விஷாலின் படமான திமிர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர்.திமிர் படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் உதவியாளராக; அவர் சொன்னதை எல்லாம் செய்யும் பாடி கார்டாக! நடித்திருப்பார் விநாயகம்.

அதுவும் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் இருப்பார். இருப்பினும் சண்டைக் காட்சிகளில் ஒற்றைக்காலுடன் அவரது நடிப்பு தத்ரூபமாக இருக்கும். அதன் பிறகு சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் நடித்தார்.

அடுத்து நடிகர் தனுஷ் உடன் மரியான் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.  அதன் பிறகு மலையாள படங்களிலே கவனம் செலுத்திய விநாயகம் பத்து வருடங்களுக்கு பிறகு ஜெய்லர் படத்தின் மூலம் மறு அவதாரம் எடுத்துள்ளார்.

ஜெய்லர் இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் ,உச்ச நட்சத்திரங்களை முதலில் வில்லன் கதாபாத்திரத்திற்கு அணுகிய போது, அவர்களும் ரஜினிகாந்த் படம் என்றால் எங்களுக்கு சம்மதம் என்றார்களாம்!. ஆனால் அவர்களுடன்நடித்தால், சண்டை காட்சிகள் இயல்பாக இருக்காது என்று படக்குழு முடிவு செய்ததாம்.

அதன் பின்பு விநாயகம் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் என்று ரஜினிகாந்த் கூறினார். மேலும் விநாயகம் அந்த கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் என்றும் பாராட்டினார்.
உச்ச நட்சத்திரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஈடு கொடுத்து நடித்தது மட்டுமல்லாமல், இயக்குனர் சங்கரின் பாணியில் அதுக்கும் மேலே சம்பவம் செய்துவிட்டார்  வில்லன் விநாயகம்!!!

Most Popular