Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவாடிவாசல் படம் ஷூட்டிங் எப்போது என அறிவிப்பு.. அமீர் - சூர்யா பிரச்சனைக்கு மத்தியில் கூட...

வாடிவாசல் படம் ஷூட்டிங் எப்போது என அறிவிப்பு.. அமீர் – சூர்யா பிரச்சனைக்கு மத்தியில் கூட ஒன்றாக நடிக்க ஒத்துழைப்பு.. !

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரும் சூர்யாவும் இணைந்து வாடிவாசல் எனும் படத்தை உருவாக்குவதாக அறிவிப்புகள் வந்தன. ஆனால் அந்தப் படத்தின் பணிகள் சுத்தமாக நகரவில்லை. ஒரு கட்டத்தில் நேரம் வீனாவதால் கைவிடப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியெல்லாம் இல்லை, இந்த ஆண்டு படம் ஆரம்பிக்கப்படுகிறது என செய்திகள் வந்துள்ளன.

- Advertisement -

வெற்றிமாறன், கடந்த 3 ஆண்டுகளாக நடிகர் சூரியை நாயகனாக வைத்து விடுதலை எனும் படத்தை இயக்கி வருகிறார். முதல் பாகம் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி. இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் இன்னுமும் போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை நிறைவு செய்துவிட்டு உடனே வாடிவாசல் பணிகளைத் தொடரவுள்ளார்.

எவ்வளவு நேரம் எடுத்தாலும் மக்களுக்கு தரமான சினிமாவைத் தர வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து எடுப்பார் இயக்குனர் வெற்றிமாறன். இதனால் தான் இவரது படங்கள் முடிப்பதற்கு பொதுவாகவே அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படும், மேலும் சிறப்பாகவும் இருக்கும். இதுவரை அவர் இயக்கிய அனைத்துப் படங்களும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று சூப்பர்ஹிட் ஆகின. அதில் சிலவற்றை பல்வேறு தேசிய விருதுகளையும் குவித்தன.

- Advertisement -

அந்த வகையில் வாடிவாசல் படமும் இணையும் என எதிர்பார்க்கலாம். இத்தனை ஆண்டுகள் கிடப்பில் கிடந்த படம் உயிர்த்தெழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் இப்படத்தில் அமீர் இணைவதால் தான் சூர்யா இப்படத்தைக் கைவிட நினைத்தார் எனச் செய்திகள் வந்தன. ஆனால் அதை அண்மையில் அமீரே பேட்டி ஒன்றில் மறுத்தார். பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வாடிவாசல் படத்தில் அமீர் வில்லனாக நடிக்கிறார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ப்ரீ-புரொடக்ஷன் துவங்குகிறது. இரண்டு ஆண்டுகள் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இணைவதற்கு முன்பு சூர்யா தன் கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிடுவார்.

Most Popular