Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாபிரின்ஸ் படத்திற்கு 12 கோடி நஷ்டம் ! இழப்பீடுக்கு சிவகார்த்திகேயன் செய்த காரியம் !

பிரின்ஸ் படத்திற்கு 12 கோடி நஷ்டம் ! இழப்பீடுக்கு சிவகார்த்திகேயன் செய்த காரியம் !

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் தன்னுடைய உழைப்பின் மூலம் படிப்படியாகவே இருந்து கதாநாயகன் ஆனவர் சிவா கார்த்திகேயன் . இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடித்த மூன்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் சிவகார்த்திகேயன் . பின்னர் தனுஷ் தயாரிப்பில் நடித்த எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் லதா நாயகனாக அறிமுகமானார் .

- Advertisement -

தனது நகைச்சுவை கலந்த நடிப்பு ஸ்டைல் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் . இவர் நடித்த எதிர்நீச்சல் கேடி பில்லா கில்லாடி ரங்கா,வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர் ,டான் போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன . இதனால் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார் . இவரது படங்கள் பொதுவாக வசூலில் மினிமம் கேரண்டி கொடுப்பவையாக இருந்தன .

இந்நிலையில் இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் இவர் நடித்த பிரின்ஸ் என்ற திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதி வெளியானது . இந்தப் படத்தில் சத்யராஜ் பிரேம்ஜி அமரன் போன்றோரும் நடித்திருந்தனர் . தெலுங்கில் பிரபல இயக்குனர் அனுதீப் கே.வி தமிழில் இயக்கியிருந்த முதல் திரைப்படம் இதுவாகும்.. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார் .

- Advertisement -

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படமானது 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தது . ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு பாக்ஸ் ஆபீஸ் இல் ஓடவில்லை . மேலும் இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சனங்கள் நெகட்டிவாக வந்தன . இதனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கே கலெக்ஷனாகவில்லை . படமானது மொத்தமாக 12 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது .

- Advertisement -

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் மதுரை அன்புச் செழியன் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த சூழ்நிலையில் படத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை விநியோகஸ்தருக்கு ஈடு செய்ய சிவகார்த்திகேயன் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது . இதனால் அவர்கள் படத்தின் நஷ்டஈடு ஆன 12 கோடியில் 50 சதவீதத்தை விநியோகஸ்தருக்கு திருப்பி கொடுக்க முடிவெடுத்தனர் . நடிகர் சிவாகார்த்திகேயன் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் ஆகியோர் ஆறு கோடி ரூபாயை விநியோகஸ்தர் மதுரை அன்புச் செழியனுக்கு திருப்பி வழங்கினர் .

இளம் நடிகராக இருக்கும்போதே திரைப்பட விநியோகஸ்தருக்கு நஷ்டத்தை ஈடு செய்ய உதவிய சிவா கார்த்திகேயனை தயாரிப்பாளர்கள் மற்றும் வெளியாகிருத்தர்கள் பாராட்டு வருகின்றனர் .

Most Popular