Saturday, October 5, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகுட் பேட் அக்லியில் கைதி தோற்றத்தில் அஜித்.. ஷூட்டிங்கில் கூட இதான் நடந்தது.. மிரட்டலான போஸ்டர்

குட் பேட் அக்லியில் கைதி தோற்றத்தில் அஜித்.. ஷூட்டிங்கில் கூட இதான் நடந்தது.. மிரட்டலான போஸ்டர்

அஜித்குமார் 62வது படமான குட் பேட் அக்லி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் துவங்கியது . வழக்கமாக அஜித்தின் படங்கள் என்றால் எந்த நேரத்தில் அறிவிப்புகள் வரும், படம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இந்தப் படம் அதற்க்கு முற்றிலும் எதிர்மறையாக உள்ளது.

- Advertisement -

அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை ஆதிக் & கோ வெளியிட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்னும் வராத நிலையில் குட் பேட் அக்லி விரைந்து இரு அப்டேட்களை கொடுத்துள்ளனர். இன்று மாலை படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கியுள்ளது.

முதல் போஸ்டரில் மூன்று அஜித் நிற்பது போல அமைந்தது. இம்முறை படத்தின் ஒரு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ” காட் பிளஸ் யூ மாமே ” என்ற வரிகள் பின்னால் இருக்க அஜித்குமார் டாட்டூவுடன் என கலக்கலான தோற்றத்தில் உள்ளார். படத்தின் வில்லன் கதாபாத்திரத்தின் லுக் இதுவாக இருக்கும் போல.

- Advertisement -

கைதி ஆடையில் அஜித் இருப்பது ரசிகர்களின் கூடுதல் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கமாக இல்லாமல் ஜாலியாக ஓர் படம் செய்வார் என்பது போன்ற உணர்வைத் தான் இதுவரை வந்த அப்டேட்கள் கொடுத்துள்ளது. இந்த போஸ்டரில் அஜித் கைதி உடையை அணிந்ததற்கு காரணம் நடந்த முடிந்த ஷூட்டிங் தான்.

- Advertisement -

முதல் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளும், ஓர் பாடலும் ஷூட் செய்யப்பட்டது. அதில் அஜித்துடன் சிலர் கைதி ஆடையை அணைத்தபடி நடனம் ஆடினர். அப்படியென்றால் படத்தில் ஜெயில் உள்ளே நடிக்கிற ஓர் பாடல் இருக்கும். கைதியாக வரும் அஜித் ஒரே ஒரு கதாபாத்திரம், அல்ல சிறிய நேரம் அவர் படத்தில் ஜெயிலில் இருப்பார். மார்க் ஆண்டனி படத்தை எடுத்தது போலத் தான் இதுவும் அமையும், அது போல தான் போஸ்டர்களும் வந்துள்ளன.

சமூக வலைத்தளத்தில் இன்று வெளியான போஸ்டரை பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள். அஜித் ரசிகர்களுக்கே இது பிடிக்கவில்லை. வேதாளம் படத்தில் கேங்ஸ்டர் கணேஷ் லுக் மற்றும் டயலாக் இன்றளவும் இணையத்தில் கேலிப் பொருளாக உலாவி வருகிறது. அதே மாதிரி மற்றொரு படத்தை ஆதிக் கொடுக்காமல் இருந்தால் போதும் என அஜித் ரசிகர்கள் பதிவிட்டு கொண்டுள்ளார்கள்.

Most Popular