Monday, October 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஒரே அடுக்குமாடி வீட்டில் விஜய் & த்ரிஷா.. ஆனால் காரணம் வேறு.. உண்மை இது தான்.....

ஒரே அடுக்குமாடி வீட்டில் விஜய் & த்ரிஷா.. ஆனால் காரணம் வேறு.. உண்மை இது தான்.. !

சினிமாவில் கிசு கிசு என்பது வழக்கமாக நடப்பது தான். அதில் சிலவற்றை உண்மையாக மாறினாலும் பல செய்திகள் வதந்திகளாகவே முடிந்துள்ளது. அண்மையில் கோலிவுட்டின் இரண்டு பெரிய நட்சத்திரங்களைப் பற்றி முழுமையாக அறியாமல் செய்திகள் பரவி வருகின்றன.

- Advertisement -

இரு தினங்கள் முன்னர் நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு பல்வேறு நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யுடன் பல படங்கள் செய்த நடிகை த்ரிஷா, இருவரும் லிப்டில் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்தினார். இதனை அழகாக ரசித்தவர்கள் ஒரு பக்கம் இருப்பது போல அதனைத் தவறாக பேசியவர்களும் உண்டு.

அதாவது விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக வாழ்ந்து வருவதாக (லிவ் இன்) தவறாக சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதிலும் சிலர், திரிஷாவின் பழைய புகைப்படங்களைப் போட்டு அதில் விஜய்யிக்கு சம்மந்தம் இருப்பது போல குறிப்பிட்டுள்ளனர். த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்தது, ஒன்றாக சுற்றியது என பல புகைப்படங்கள் அதில் அடங்கும்.

- Advertisement -

லியோ ஷூட்டிங் ஸ்பாட் அல்லது அதற்கு பின்பு அவர்கள் நண்பர்களாக வெளியில் செல்வதைக் கூட தவறாக பேசுவது மோசம். மேலும் விஜய்யின் புதிய ஆபீஸ் இருக்கும் அதே அடுக்குமாடியில் நடிகை த்ரிஷாவும் புதிதாக வீடு வாங்கியுள்ளதால் தவறான பேச்சுக்கு இடம் அதிகமாகக் கிடைத்துவிட்டது. இன்னும் சொல்லப் போனால் திரிஷா வெளியிட்ட அந்த புகைப்படம் கூட அங்கு எடுத்தது தானாம். ஆனால் இதிலெல்லாம் வைத்துக் கொண்டு தப்பாக பேசிவிட முடியாது.

- Advertisement -

இப்படித் தான் சில மாதங்கள் முன்பு விஜய்யையும் நடிகை கீர்த்தி சுரேஷையும் ஒன்றாக சேர்த்து வைத்து தப்பாக பேசினர். சினிமாவில் இத்தகு இடத்தில் இருக்கும் நட்சத்திரங்களை அதுவும் 50 வயது எட்டியவரை இப்படிப் பேசுவது மிகவும் மோசம்.

Most Popular