Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகளத்தில் 1500 பேர்.. 16 மணி நேரம் சூட்டிங்..! வெறித்தனமாக நடிக்கும் தனுஷ்

களத்தில் 1500 பேர்.. 16 மணி நேரம் சூட்டிங்..! வெறித்தனமாக நடிக்கும் தனுஷ்

- Advertisement -

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன் சுதீப் கிஷன் சிவராஜ் குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த வருகிறார்கள்.

அருண் மாதேஸ்வரன் படம் என்றாலே கொடூரமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்தத் திரைப்படம் சுதந்திர இந்தியாவுக்கு முன் நடைபெற்ற கதைக்களத்தைக் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றாலம், கொடைக்கானல் என கடைப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்ற நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் தொடர்பாக ஒரு செம அப்டேட் கிடைத்துள்ளது.

- Advertisement -

ஒரே பிரேமில் 1500 நடிகர்கள் தொடர்ந்து 16 மணி நேரம் நடித்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதில் தனுஷ் காலை 5 மணிக்கு நடிக்க தொடங்கி இரவு 2 மணி வரை தொடர்ந்து ஆக்சன் காட்சிகளில் நடித்த பட குழு கூறியுள்ளது.

- Advertisement -

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தனுஷ் திரைப்பட வாழ்க்கையில் கேப்டன் மில்லர் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இதேபோன்று தொடர்ந்து இரவு நேரத்தில் பல்வேறு காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரவு ஐந்து மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பு அதிகாலை ஐந்து மணி வரை தொடர்ந்து நடக்கிறது .ஆனால் நேற்று மட்டும் பதினாறு மணி நேரம் எடுக்கப்பட்டிருக்கிறது .

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சியில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்த சத்யஜோதி நிறுவனமே கேப்டன் மில்லர் திரைப்படத்தை எடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் மாதேஸ்வரன் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் சமீபத்தில் வெளியான ராக்கி மற்றும் சாணி காகிதம் போன்ற திரைப்படங்களை பார்த்து, அதில் தனுஷ் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என யோசித்துவருகிறார்கள்.

Most Popular