Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா2023ஆம் ஆண்டு வெளியான டாப் 3 அங்கீகாரம் பெறாத சூப்பர் படங்கள்

2023ஆம் ஆண்டு வெளியான டாப் 3 அங்கீகாரம் பெறாத சூப்பர் படங்கள்

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அத்திரைப்படத்தினுடைய கதாநாயகன் இயக்குனர் கதைக்களம் இவர்களை வைத்து தான் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. உதாரணமாக தளபதி விஜய்யின் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட போகிறது என்றால் அதற்குப் பின் எந்த கதையாக இருந்தாலும் அது யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.

- Advertisement -

ஆனால் இன்னும் சில திரைப்படங்கள் பிரபலமான நடிகர்கள் இல்லாமல் பிரபலமான இயக்குனர்கள் இல்லாமல் சிறந்த கதை களத்தை மட்டுமே வைத்து உருவாக்கப்படுகிறது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளும் இருப்பதில்லை.

படக்குழுவினர்களிடமிருந்து பெரும் அளவில் விளம்பரங்களும் இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெரிய அளவில் அதற்கு பட்ஜெட்கள் கூட இருப்பதில்லை. ஆனாலும் அந்த திரைப்படங்களின் கதைக்களம் மிக அருமையாக இருக்கும்.

- Advertisement -

அவ்வாறான திரைப்படங்களைப் பார்ப்பதற்கு யாரும் திரையரங்குகளுக்கு பெரும்பாலும் முன் வருவது இல்லை. ஆனால் அதற்குப் பிறகு ஓடிடிலிலோ இல்லை தொலைக்காட்சிகளிலோ அந்த திரைப்படத்தை பார்த்த பிறகு இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் விட்டு விட்டோம் என்ற ஏக்கம் ஏற்படும்.

- Advertisement -

அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கக்கூடிய மூன்று திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது அவை என்னவென்று பார்ப்போம்.

இயக்குனர் என் எஸ் பொன் குமார் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்த ஆகஸ்ட் 16 1947 என்ற திரைப்படம் இந்த வரிசையில் இடத்தில் இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் உள்ள காலகட்டத்தில் ஒரு கிராமம் சுதந்திரம் கிடைத்தது கூட தெரியாத அளவிற்கு வெள்ளையர்களால் எப்படி அடிமைப்பட்டு இருந்தது என்பதை கூறும் திரைப்படம் தான் இந்த 1947. இது நிச்சயம் ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்றாகும்.

இயக்குனர் தயால் பத்மநாபன் இயக்கத்தில் கொன்றால் பாவம் என்ற திரைப்படம் வெளிவந்தது .இந்த திரைப்படம் தான் இந்த வரிசையில் இரண்டாவது திரைப்படம் ஆகும் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் குக் வித் கோமாளியின் பிரபலம் சந்தோஷ் நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் முற்றிலுமே புதுமையான கதைகளாகும் சிறுவயதில் தொலைந்த தன்னுடைய அண்ணனை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் வரலட்சுமி தான்.அண்ணன் என்றே தெரியாமல் அவன் மீது ஆசை கொள்வது போலும் அதற்குப் பிறகு தன்னுடைய வறுமையால் அவனிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க அவனையே தன் கையால் கொல்வது போல் அமைந்திருக்கும்.

இதைத்தொடர்ந்து இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்கியை யாத்திசை திரைப்படம் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் இடத்தில் இருக்கிறது இத்திரைப்படத்தை இந்திய தமிழ் வரலாற்று அதிரடி திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் காட்சிகள் பார்ப்பதற்கு 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் என் திரைப்படத்தை போல் இருக்கும்.

இந்த மூன்று திரைப்படங்களும் கதைகளை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட திரைப்படங்கள் ஆகும். இது திரைப்படத்தை திரைப்படத்தில் பார்க்காமல் பார்த்தவர்கள் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பார்கள்.

Most Popular