Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகேவலம் இந்த ஒரு காரணத்துக்காக பிரியா பவானி ஷங்கர் நிகழ்ச்சிக்கு வரக் கூடாது.. போஸ்டர்களில் இருக்க...

கேவலம் இந்த ஒரு காரணத்துக்காக பிரியா பவானி ஷங்கர் நிகழ்ச்சிக்கு வரக் கூடாது.. போஸ்டர்களில் இருக்க கூடாது என சங்கித் தனமாக செயல்பட்ட விஷால்.. !

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் ரத்னம். இப்படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கரை மிகவும் மோசமாக அவமானப்படுத்தியுள்ளார் விஷால். இச்செய்தியை அறிந்தோர் விஷாலை மிகவும் கண்டித்து வருகின்றனர்.

- Advertisement -

ரத்னம் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். தாமிரபரணி படத்திற்குப் பிறகு விஷால் – ஹரி இணைந்து பணியாற்றியுள்ளனர். விஷால், பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். ஆனால் நடிகை பிரியா பவானி ஷங்கர் மட்டும் வரவில்லை. அதற்க்கு அவர் வேறு படத்தின் ஷூட்டிங்க்கு சென்றுவிட்டதாக விஷால் கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால் அவர் சொன்னது முற்றிலும் பொய்யென இன்று தெரியவந்துள்ளது. அதாவது பிரியா பவானி ஷங்கரை நடிகர் விஷால் தான் வரவேண்டாம் என தடுத்துள்ளார். காரணம், இதற்கு முன்பு பிரியா பவானி ஷங்கர் நடித்தத் திரைப்படங்கள் சரியாக போகாததால் அவருக்கு ராசி இல்லை எனும் சென்டிமென்ட் எனக் கூறி அவரின் வருகையை மறுத்துள்ளார்.

- Advertisement -

இந்தச் சம்பவத்தில் இயக்குனர் ஹரிக்கு சுத்தமாக விருப்பமில்லை. ஆனால் விஷாலின் பிடிவாதத்தால் ஹரியால் எதுவும் செய்ய இயலவில்லை. இதோடு விஷால் நிறுத்தாமல், படத்தின் போஸ்டர்களிலும் நடிகை பிரியா பவானி ஷங்கரின் புகைப்படங்களை நீக்கச் சொல்லியுள்ளார். படத்தின் நடிகை மிகவும் முக்கியக் கதாபாத்திரம் என்றும் பாராமல் அவர் இதனைச் செய்துள்ளார்.

இது சங்கித் தனமான புத்தி என சினிமா வட்டாரங்களில் விஷாலை பயங்கரமாக திட்டி வருகிறார்கள். அரசியலில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென ஒயாமால் பேசி வரும் விஷால், ஒரு நடிகைக்கே இப்படி மோசம் செய்கிறார் என்றால் எந்த விதத்தில் மக்களுக்கு நல்லது செய்வார். அது மட்டுமில்லாமல் விஷாலின் படமே கடைசியாக எது நன்றாக ஓடியது என அவருக்கே நினைவு தெரியாது.

மார்க் ஆண்டனி கூட எஸ்.ஜே.சூர்யாவுக்கு மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. இந்த லட்சணத்தில் இருக்கும் விஷால் மற்றொரு நடிகையை இழிவாக நடத்துவது மிகவும் பெரிய தவறு. சமீபத்தில் விஜய்யைப் போலவே சைக்கிளில் வந்து ஓட்டு போட்டு அதற்க்கு மொக்கையாக ஒரு காரணம் கூறி சமூக வலைத்தளத்தில் கேலிப் பொருளானார், இப்போது இது. ஹீரோயிசம் காட்ட முயற்சித்து காமெடியனாக வந்து நிற்கிறார் நடிகர் விஷால்.

Most Popular