Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாரீ ரிலீஸ் கலாச்சாரம் : மே மாதம் வெளியாகயுள்ள 5 விண்டேஜ் விஜய், அஜித், கமல்...

ரீ ரிலீஸ் கலாச்சாரம் : மே மாதம் வெளியாகயுள்ள 5 விண்டேஜ் விஜய், அஜித், கமல் படங்கள்.. !

இந்த ஆண்டு இந்திய சினிமாவில் மலையாளப் படங்கள் தான் விமர்சன & வசூல் ரீதியாக இரண்டிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது. 4 மாதங்களில் 5 படங்கள் மூலம் 1000 கோடிகள் அள்ளியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிப் படங்கள் பெரிதாக எடுபடவில்லை.

- Advertisement -

கோலிவுட்டில் இந்த ஆண்டு திட்டமிட்டுள்ள பெரிய படங்கள் ஜூன் மாதம் பிறகு தான் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் சொல்லிக் கொள்ளும் அளவு எந்தப் படமும் தமிழில் பாராட்டுகளைப் பெறவில்லை. அதனால் வியாபாரத்துக்காக தியேட்டர் நிறுவனங்கள் எடுத்த ஆயுதம் தான் ரீ – ரிலீஸ்.

இந்தக் கலாச்சாரம் ஒரு பக்கம் நல்ல லாபத்தைக் கொடுத்தாலும் மறுபக்கம் புதிதாக வரும் சின்ன சின்ன படங்களுக்கு போட்டியாக வந்து அப்படங்களை மறைக்கிறது. இந்தப் படங்களை மறு வெளியீடு செய்யும் கலாச்சாரத்தை துவங்கியது சென்னை கமலா சீமாட்டி தான். அவர்களின் இந்தத் திட்டம் வெற்றியடைய அடுத்தடுத்து அனைவரும் பின்பற்றினர்.

- Advertisement -

வேட்டையாடு விளையாடு, பாபா, ஆளவந்தான் சுப்ரமணியபுரம், வடச் சென்னை ஆகிய படங்களில் ஆரம்பித்த இந்தக் கலாச்சாரம் பிறகு விண்டேஜ் படங்கள் பக்கம் திரும்பியது. பையா, வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. அனைத்து மறு வெளியீட்டுப் படங்களின் சாதனைகளையும் வழக்கம் போல தளபதி விஜய்யின் படம் தகர்த்தது.

- Advertisement -

ஏப்ரல் 20ஆம் தேதி தளபதி விஜய் – த்ரிஷா – பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கில்லி மாபெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. முதல் நாளே 10+ கோடிகள் அள்ளியது. பொருளாதார சிக்கலில் இருக்கும் தயாரிப்பாளர் ரதன்மா அவர்களுக்கு இப்படத்தின் வசூல் பெரிய உதவியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து அவரிடம் உள்ள மற்ற இராண்டுப் படங்கள் குஷி, இந்தியன் ஆகியவற்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளார். ஜூன் மாதம் இந்தியன் 2 வெளியாகவிருப்பதால் மே இறுதியில் இந்தியன் படத்தையும் அதன் பிறகு குஷி படத்தையும் வெளியிட உள்ளார். கில்லி, குஷி போன்ற படங்கள் வெளியான தருணத்தில் குழந்தையாக இருந்த நடப்பு இளம் விஜய் ரசிகர்கள் முதல் முறை பார்ப்பது போல கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.

குஷி, இந்தியன் படங்கள் தவிர அஜித்தின் இரண்டு படங்களும் அடுத்த மாதம் வெளியாகக் காத்திருக்கிறது. மே 1 அஜித்தின் பிறந்தநாளில் மங்காத்தா மற்றும் பில்ல 2 ஆகியப் படங்களை வெளியிட தியேட்டர் நிர்வாகிகள் திட்டமிட்டு அதன் தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார்கள்.

Most Popular