நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வசூலை விட்டு சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடப்பாண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற தமிழ் படம் என்று பெருமையை ஜெய்லர் பெற்றிருக்கிறது.
ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான முதல் இன்று வரை பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஜெய்லர் திரைப்படம் உள்ளது. இந்த நிலையில் போட்ட பணத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து விட்டது.
இதன் பிறகு வசூல் ஆகும் அனைத்துமே படத்தின் லாபத்தையே அதிகரிக்கும். கபாலிக்கு பிறகு நடிகர் ரஜினியின் திரைப்படம் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. விடுமுறை நாட்கள் முடிந்து தற்போது பணி நாளாக இருக்கிறது என்றும் பல்வேறு திரையரங்குகளில் பல காட்சிகள் வேகமாக புக் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் எப்போது வரும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயிலர் திரைப்படம் செப்டம்பர் ஏழாம் தேதி நெட்லிபிளிக்ஸ் மற்றும் சன் என் எக்ஸ் டி ஆகிய ஓடி டித்தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.
பெரிய படங்கள் திரையரங்கில் இருந்து ரிலீஸ் ஆகி 28 நாட்கள் கழித்து தான் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த தேதியில் ரிலீஸ் செய்யப்படலாம். எனினும் படம் நினைத்ததை விட நல்ல வசூலை பெற்று தருவதால் படத்தின் ஒடிடி ரிலீஸை தள்ளி வைக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
ஆனால் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்குமா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. அண்மையில் வெளியான போர் தொழில் திரைப்படமும் நல்ல வசூலை பெற்றதால் அதன் ஒடிடி ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது
அதே பாணியில் தற்போது ஜெயிலரும் பின்பற்றுமா என எதிர்பார்க்கப்படுகிறது. பல திரைப்படங்கள் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டாலும், ஒடிடியில் அடித்து நொறுக்கப்படும். எனினும் ஜெயிலருக்கும் அதே நிலை ஏற்படும் என சிலர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த வருகின்றனர்.