சினிமாவில் சாதிக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு நடிகருக்கும் தங்களுடைய உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் மட்டுமே பெரிய அளவில் சினிமாவில் ஜொலிக்க முடியும்.
இந்த நிலையில் ஒவ்வொரு நடிகரும் இதற்காக தனி பயிற்சியாளர்களை ஒப்பந்தம் செய்து பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன், அஜித், லாரன்ஸ் போன்ற நடிகர்களுக்கு பயிற்சியாளராக சிவக்குமார் என்ற நபர் பணிபுரிந்து வருகிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் தமிழகத்தில் பல ஜிம் பயிற்சியாளர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு போதிய அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து ஜிம் பயிற்சியாளர்கள் வரவழைக்கப்படுவதாகவும் அவர்களுக்கு தமிழக உணவு, தமிழக காலநிலை பற்றி தெரியாது என்றும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்க்கு தாம் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிய வேண்டும் என்று சிவக்குமார் ஆர்வம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு தனியாக ஜிம் பயிற்சியாளர் ஏதும் இல்லை என்றும் விஜய் தானாகவே பயிற்சி எடுத்துக் கொள்வதாக கேள்விப்பட்டேன் என்று கூறியுள்ளார்.
விஜயின் உடலும் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் உடலும் ஒரே அளவும் ஒரே மாதிரி இருக்கும் என்று குறிப்பிட்டவர் நடிகர் விஜய் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும் அவருடைய உடல் பெரிய அளவில் குண்டாக மாறாது என்றும் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்துக்கு தான் நான்கு படங்கள் வரை பணிபுரிந்ததாகவும் தன் மீது அஜித் பாசமாக இருந்ததாகவும் சிவகுமார் கூறியுள்ளார்.நடிகர் அஜித் உடற்பயிற்சி செய்யும் போது பலமுறை பிரியாணி செய்து கொடுத்திருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் 70 வயதிலும் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றால் அவர் தினமும் உடற்பயிற்சி செய்வதாக சிவக்குமார் கூறியுள்ளார்.