தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய திரைப்படம் என்றால் அது லியோ தான். இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது.
தற்போது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் லியோ தொடர்பாக பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். லியோ திரைப்படம் ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்ற ஆங்கில திரைப்படத்தின் தழுவளாக எடுக்கப்பட்டதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் இந்த படம் தொடங்கியதில் இருந்து இந்த படத்துடன் தொடர்புபடுத்தி பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதற்கு எல்லாம் படம் ரிலீசான பிறகு நான் பதில் கூறுகிறேன். அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்.
நான் இது எல்சி யூவா இல்லையா இது இந்த படத்தின் ரீமேக் என இப்போது கூறிவிட்டால் படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு எவ்வித சுவாரசியமும் இருக்காது. இதன் காரணமாக தாம் இப்போது எந்த தகவலையும் கூறப்போவதில்லை என கூறினார்.
இதுபோன்று நடிகர் கமலஹாசன் லியோ படத்தில் நடித்திருக்கிறாரா என்ற கேள்வி கேட்கப்பட்டதற்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறது என்று பதில் அளித்தார். மேலும் டப்பிங் ஸ்டுடியோவில் தம் கமல்ஹாசனை பார்த்தது உண்மைதான் என்று கூறிய லோகேஷ் கனகராஜ், படத்தின் சென்சார் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கூட நான் கமல் சாரை பார்த்தேன்.
நான் போகும் இடம் எல்லாம் கமல் சாரும் இருக்கிறார் என்று தெரிவித்தார். இதே போல் காஷ்மீரில் பல நடிகர்கள் வந்து சென்றனர். அவர்கள் விடுமுறைக்காக வந்தது எல்லாம் லியோ படத்தில் நடித்தார்கள் என்று தொடர்பு படுத்தி பலரும் போட்டு வருகிறார்கள்.
அனல் அதில் சில உண்மையும் இருக்கிறது. நான் இப்போதே அனைத்தையும் கூறிவிட்டால் உங்களுக்கு படம் பார்க்கும்போது கிடைக்கும் சுவாரசியம் போய்விடும். விஜய் சார் இதுவரை ஆக்சன் படங்களில் நடிக்காத அளவுக்கு இப்படி ஒரு சண்டை காட்சிகளை நடித்திருக்கிறார் என்று லோகேஷ் கனகராஜ் கூறினார் .