நடிகர் மற்றும் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இரண்டே படங்களில் இளைஞர்கள் பட்டாளத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அதே வேகத்தில் அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். தன் பிரபலத்துக்கு ஏற்ப தன் சம்பளத்தையும் அவர் அதிகரித்துள்ளார். இரண்டே படங்களின் இத்தனை கோடிகளா என்ற பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து கோமாளி எனும் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் பிரதீப். நல்ல கலகலப்பான காமெடி படமானது சூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து அடுத்தப் படத்தில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தானே முன்வந்து நடித்தார்.
முதல் படத்தை விட இரண்டாவது படமான லவ் டுடேவுக்குத் தான் மிகப் பெரிய அளவில் வரவேற்பு. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பெரிய ஹிட். பிறகு இப்படத்தை ரீமேக் செய்ய ஹிந்தியில் உரிமம் கூட பெற்றுவிட்டனர். காதல், அதில் வரும் சண்டை, நண்பர்கள் கலாட்டா, நடப்பு டிரெண்ட் என இளைஞர்கள் சப்ஜெக்ட் மூலம் அவர்களிடத்தில் பிரபலமாகினார்.
இவரின் இந்த இரண்டுப் படங்களுக்கும் புதுமுகம் என்பதால் சம்பளம் பெரிதாக இல்லை. ஆனால் மக்களின் வரவேற்புக்கு பிறகு கோடிகளில் புரண்டு வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘ எல்.ஐ.சி ’. கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிந்துவிடும்.
இதனை முடித்துவிட்டு அடித்ததாக மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் அடுத்தப் படத்தைத் துவங்கவுள்ளார். இந்தப் படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் 15 கோடிகள் சம்பளம் தருமாறு கேட்டுள்ளார். பின்னர், தயாரிப்பு நிறுவனம் பேசி பேசி இறுதியில் 10 கோடிகள் தருமாறு ஒப்புக் கொண்டுள்ளனர். இரண்டே படங்களில் 10 கோடிகள் சம்பளத்துக்கு உயர்வது மிகப் பெரிய விஷயம். இது முன்னணி நடிகையான நயன்தாராவின் சம்பளத்தை ( 9 கோடிகள் ) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.