அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் சினிமா ஒரு பக்கம் தன் உலக சுற்றுலா & குடும்பம் மறுபக்கம் என சந்தோஷமாக வாழ்கையை கடந்து வருகிறார். இதனால் வருடத்துக்கு ஒரு படமென்பது ஒன்றரை அல்லது இரு வருடங்களாக நீடித்துட்டது.
அண்மையில் அஜித்குமார் இயக்குனர் மகிழ் திருமேனி தலைமையில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். சிறப்பாக நடந்துக் கொண்டிருந்த ஷூட்டிங் பொருளாதார சூழலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே கடந்த வாரம் வெளியான விபத்து வீடியோ தவிறது எந்த ஒரு அப்டேட்டும் கூட வரவில்லை.
நேற்று வேட்டையன் படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகி அதனுடைய விற்பனை துவங்க, பல நிறுவனங்கள் அட்வான்ஸ் பணத்துடன் வந்துள்ளனர். இப்பணத்தை வைத்து விடாமுயற்சி மீண்டும் ஷூட்டிங்க்குப் போகிறது. தேர்தல் முடிவடைந்த மறு தினமே படப்பிடிப்பை தொடர்கிறார்கள்.
அஜித் விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்துவதோடு சேர்த்து மற்றொரு படத்தின் அறிவிப்பையும் வழங்கிவிட்டார். மார்க் ஆண்டனி படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித் – ஆதிக் கூட்டணி இணைவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவின. அது கடந்த மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த போதே ஆதிக் இக்கதையை அஜித்திடம் கூறி நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டாராம். படத்தின் தலைப்பான ‘ குட் பேட் அக்லி ’ ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. வழக்கமாக வரும் சாதரான தலைப்புகளுக்கு மத்தியில் இது உண்மையிலேயே அமர்க்களமாக இருக்கிறது.
குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் துவங்கவுள்ளது. சென்னை செம்பரம்பாக்கம் ஈ.வி.பி அருகில் தனியார் இடத்தின் செட் அமைத்து முதல் 30 நாட்கள் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. பின்னர் ஹைதரபாத், ஜப்பான் என அடுத்தடுத்து நகரவுள்ளனர்.
ப்ரீ புரெட்க்ஷன் பணியில் தீவிரமாக இருக்கும் ஆதிக் & கோ, தற்போது ஹீரோயின் தேர்வு செய்யும் பணியில் உள்ளனர். தளபதி விஜய்யின் கோட் படத்தில் நடிக்கும் மீனாக்ஷி சவுத்ரி அஜித்துடன் இணைவார் என பேச்சுகள் போய்க் கொண்டுள்ளது. இதனை இயக்குனரிடம் அஜித்தே கேட்டுள்ளார் எனத் தெரிகிறது.