தனுஷின் அடுத்தத் திரைப்படமான ராயன் வருகிற ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்த மாதமே தேர்தலுக்கு மறுதினம் வெளியாவதாக இருந்தப் படம் ஜூன் மாதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து வெளியாகும் விமர்சனங்கள் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்துகிறது.
2017ஆம் ஆண்டு முதன் முதலாக பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தனுஷ். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் கடந்த ஆண்டு இயக்கி ரீலீசுக்கு தயாராக்கிக் கொண்டுள்ளார். பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல்திறன் கொண்ட தனுஷின் மேல் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் அறிவிப்பு வரும் போதே கேங்ஸ்டர் வகைப் படம் என செய்திகள் வந்தன. வெளியான போஸ்டர்களும் அதை உணர்த்தின. படக்குழு இப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டி தள்ளியுள்ளனர். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பதைத் தூண்டுகிறது.
படம் எடிட்டிங் செய்யப்பட்ட பின் பார்த்தவர்கள், தனுஷ் தான் அடுத்த வெற்றிமாறன் என புகழ்ந்து உள்ளார்கள். இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் 4 படங்கள் செய்து கற்றுக் கொண்டு அவரின் ஸ்டைலில் ஓர் கேங்ஸ்டர் படம் உருவாக்கி இருப்பதாக பாராட்டியுள்ளனர். அதாவது ராயன் படம் இரத்தமும் சதையும் தெறிக்க தெறிக்க இருக்குமாம்.
அது மட்டுமில்லாமல் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ராயன் படத்தைப் பார்த்து அசந்து போயுள்ளார். பொதுவாக இசையமைப்பாளர்கள் ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் போக மாட்டார்கள். ஆனால் ரஹ்மானோ மூன்று முறை நேரில் சென்றுள்ளார். இயக்குனராக தனுஷ் மிகவும் திறமையானவர் என்பதைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தானே எடுத்து ரீ ரெக்கார்டிங்கை முடித்து தருவதாக கூறியுள்ளார். அதற்கான பணிகளையும் துவங்கிவிட்டார். அடுத்த மாதம் பாடல்கள், டிரெய்லர் என புரொமோஷன் பணிகளும் விரைவில் ஆரம்பித்துவிடுவர். தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், துஷாரா, அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி என பெரிய பட்டாளமே ஒருங்கிணைந்து நடித்துள்ள இப்படம் தமிழில் 2024ஆம் ஆண்டின் முதல் பெரிய ஹிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.