Wednesday, November 20, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஅஜித் தயாரிப்பாளர் மாட்டிக் கொண்டார்.. சிக்கலில் குட் பேட் அக்லி திரைப்படம்.. கைவிடப்படுமா ?

அஜித் தயாரிப்பாளர் மாட்டிக் கொண்டார்.. சிக்கலில் குட் பேட் அக்லி திரைப்படம்.. கைவிடப்படுமா ?

அஜித்குமார் அவர்கள் இன்னுமும் மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தில் தான் நடித்து வருகிறார். இன்று தேர்தல் நாளில் தன் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டு உடனே ஷூட்டிங் செல்கிறார். இதற்கு அடுத்து குட் பேட் அக்லி படத்திற்கு நகர்கிறார். அந்தப் படம் தற்போது பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதால் படம் தொடருமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பின்னர் இப்போது தான் நல்ல பாதையில் போகிறது. அதற்குள் அஜித்துக்கு மற்றொரு சிக்கல். முதலில், விடாமுயற்சி திரைப்படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் இடையில் பொருளாதார நெரிசலால் படத்தை நிறுத்தி வைத்தனர்.

வேட்டையன் படத்தை வியாபாரம் பார்க்கத் துவங்கி அதில் வரும் பணத்தை வைத்து விடாமுயற்சி படத்திற்கு பட்ஜெட் ஒதுக்கியுள்ளனர். இதன் மூலம் மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடர்கிறது. அஜர்பைஜானில் துவங்கிய ஷூட்டிங் இன்னும் நடக்கிறது. ஏறத்தாழ 60% பணிகள் இப்போது வரை முடிந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

- Advertisement -

மறுபக்கம், அஜித் அவரது அடுத்தப் படத்திற்கு சென்றுவிட்டார். மார்க் ஆண்டனி படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைக் கண்ட ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என அவரது அடுத்தப் படத்தின் அறிவிப்பு சில வாரங்கள் முன்னர் வந்தது. இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் தயாரிக்கிறது.

- Advertisement -

அஜித்தின் இப்படம் மட்டுமல்லாமல் சுமார் 7/8 படங்கள் அவர்கள் அடுத்தடுத்து தமிழில் தயாரிக்கின்றனர். இந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் பெரிய சிக்கல் உண்டானதால் அது முடக்கப்படும் அளவிற்கு வந்து நிற்கிறது. அதாவது மைத்ரி மூவிஸ் நிறுவனத்தில் இரு தயாரிப்பாளர்கள் உள்ளனர். அதில் ஒருவரான நவீன் பிஸ்னஸில் தொலைபேசி அழைப்பில் நடந்த பிரச்சனையால் அவர் மீது ஹைதரபாத் போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் தயாரிப்பாளர் நவீன் பதுங்கியதால் அவரைக் கைது செய்ய தீவிரமாக போலீசார் தேடி வருகிறார்கள். இது நிறுவனத்துக்கு பெரிய பாதிப்பைக் கூட உண்டாக்கலாம், அதன் மூலம் படம் தொடருமா அல்ல வேறு தயாரிப்பாளரிடம் கை மாற்றப்படுமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Popular