Thursday, October 17, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாலைகா நிறுவனம் மேல் செம கடுப்பில் இருக்கும் ரஜினிகாந்த்.. இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு...

லைகா நிறுவனம் மேல் செம கடுப்பில் இருக்கும் ரஜினிகாந்த்.. இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு கூட வரமாட்டார்.. !

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் மெகா ஹிட் படமாக அமைந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. 95% பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாக்கியுள்ளது. ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான், அதனுடன் பெரிய பட்டாளத்தைக் கொண்டாதால் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

- Advertisement -

இந்தியன் 2 திரைப்படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பேன் இந்தியா படமென்பதால் புரொமோஷனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்காக பல முக்கிய நகரங்களில் படத்தின் முக்கிய ஆட்கள் நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

முதல் கட்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளார்கள். வருகிறது மே 16ஆம் தேதி அது நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் அவர்களை அழைக்க லைகா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. சமீபமாக கமலும் ரஜினியும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் தற்போது லைகா நிறுவனம் எதிர்பார்த்தது போல சூழ்நிலை இல்லை. ரஜினி அவர்கள் மேல் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. காரணம், லால் சலாம் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அந்தப் படத்திற்கு பெரிதாக கவனம் செலுத்தாதது ரஜினிகாந்த் அவர்களுக்கு வருத்தம். மேலும் வேட்டையன் படத்தையும் அவர்கள் தான் தயாரிக்கிறார்கள். அதிலும் இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏதோ சங்கட்டங்கள் நிலவின.

- Advertisement -

இதனால் ரஜினி இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகைத் தரமாட்டார் எனவும் லைகா நிறுவனமும் அதைச் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்கள். ஷங்கர் இதற்கு தீர்வாக ராம்சரணை அழைக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளார். அதுபடி ராம்சரண் நிகழ்ச்சிக்கு வருவார் என எதிர்பார்க்கலாம்.

மே முதல் வாரம் அனிருத் இசையில் முதல் பாடல் வரவிருக்கிறது. ‘ தாத்தா வராரு தாத்தா வராரு ‘ என்பது போல ஒரு பாடல் என சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவின. அதன் பின் மே 16ஆம் தேதி பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் மொத்த ஆல்பமும் வெளியாகும்.

Most Popular