நாயகன் படத்துக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து உலகநாயகன் கமல்ஹாசன் – மணிரத்னம் ஜோடி கைக் கோர்த்துள்ளது. தக் லைஃப் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படம் தற்போது தீவிரமான படப்பிடிப்பில் உள்ளது. மல்டி ஸ்டார் படமான இதில் துவக்கத்தில் கமலுடன் மற்ற பெரிய நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.
கடந்த ஆண்டு வந்த அறிவிப்பில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் ஓரிரு மாதங்களில் அவர்கள் படத்தில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகினர். மணிரத்னம் பெரிய நடிகர்களின் தேதிகளை வாங்கி வைத்துக் கொண்டு வீனடித்ததால் இருவரும் விலகியதாக தகவல்கள் வந்தன. ஆனால் உண்மையில் இதற்கு பின்னர் பல்வேறு காரணங்கள் உள்ளன.
துல்கர் சல்மான் தேதிகள் படத்தில் இடித்ததால் அவர் வெளியேறினார். மற்றப்படி இதில் வேறு எந்தத் காரணமும் இல்லை. ஆனால் இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகியதற்கு பின்னால் இரு பெரிய சம்பவங்கள் உள்ளன. ஒன்று தேதிகளை வீணடித்து, மற்றொன்று மணிரத்னம் நடிகர் ஜெயம் ரவிக்கு அளிப்பதாக கூறிய சம்பளம். பொன்னியின் செல்வன் படத்திலேயே பல்வேறு பெரிய நட்சத்திரங்கள் இருப்பதாக காரணம் காட்டி வழக்கமாக வாங்கும் சம்பளத்தில் பாதி தான் ஜெயம் ரவிக்கு அளித்தார் மணிரத்னம்.
பிறகு இப்படத்தில் அதனையும் பாதியாக்கி பேசியுள்ளார். இது ஜெயம் ரவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மணிரத்னம் பொதுவாகவே எந்த ஒரு நடிகருக்கு அவர்கள் பெரிய விரும்பும் சம்பளத்தைக் கொடுக்க மாட்டார். இதில் ஜெயம் ரவி சற்றும் தயங்காமல் விலகியது ஒரு விதத்தில் சரி தான். ஜெயம் ரவி விலகியதால் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு வகையில் கெட்டப் பெயர்.
அடுத்தடுத்து இரு நடிகர்கள் வெளியேறியது மணிரத்னம் அவர்களுக்கு அவமானத்தை உண்டாக்கும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என ஜெயம் ரவியிடம் பேசி அவரை மீண்டும் படத்திற்குப் வளைத்துப் போட சுஹாசினி மணிரத்னம் முயற்சித்தார். ஆனால் ஜெயம் ரவி அதற்க்கு மற்றொரு காரணத்தைக் கூறி தப்பித்துவிட்டார். அதாவது இப்படத்தில் இரு நடிகர்கள் வெளியேறியதால் சிம்பு உள்ளே வந்தார்.
சிம்பு இப்படத்தில் இருந்தால் தான் நிச்சயம் நடிக்க மாட்டேன் எனக் கூறி ஜெயம் ரவி விலகினார். இதனால் தற்போது மணிரத்னம் கமல் – சிம்பு இருவர்களைச் சுற்றி மட்டுமே படம் நகர்வது போல திரைக்கதையை மாற்றி எழுதியுள்ளார். செர்பியா, ராஜஸ்தான், டெல்லி என ஷூட்டிங் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.