தளபதி விஜய் இன்னும் 2 படங்களுடன் முழுமையாக சினிமாவில் இருந்து விலகி அரசியல் பணிகள் செய்யவிருக்கிறார். இதனை பிப்ரவரி மாதம் கட்சி துவங்கியவுடன் அறிவித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.
இப்படத்தில் விஜய் தன் காட்சிகளை இரு தினங்கள் முன்பு முடித்துள்ளார். இன்னும் சில காட்சிகள் மட்டுமே இருக்கும் நிலையில் படம் உடனே போஸ்ட் புரொடக்ஷனுக்கு நகர்கிறது. முதல் பாதிக்கான டப்பிங் பணிகளை விஜய் முடித்துவிட்டு படத்தில் இருந்து ஒரு மாதம் விலகியுள்ளார்.
அரசியல் பணிகளுக்காக ஜூன் மாதத்தை ஒதுக்கியுள்ளார். கடந்த ஆண்டைப் போலவே 10,12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விழாவில் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதனை முடித்துவிட்டு மீண்டும் கோட் படத்தில் அவர் இணைவார். வழக்கமாக ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்த உடனே விஜய் அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கை துவங்குவார்.
ஆனால் இம்முறை அதில் மாற்றம். அரசியல் பக்கம் கால் வைத்துள்ளதால் தளபதி 69 படம் தள்ளிப் போகிறது. விஜய் தன் கட்சியைத் துவங்கி முதல் முறையாக ஓர் பெரிய மாநாட்டை நடத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை சம்பாதிக்க திட்டம் திட்டியுள்ளார். அதற்க்கு தேர்தல் கமிஷனின் அனுமதி தேவை. ஜூன் மாதம் தேர்தல் முடிவுகள் வந்தப் பிறகு தான் அதை நடக்கும்.
இதனால் அக்டோபர் மாதத்திற்கு தளபதி 69 படம் தள்ளப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் களத்தைக் கொண்டது ஆகும். அரசியலுக்குள் நுழைவதற்கு முன் கடைசிப் படத்தில் மக்களைக் காக்கும் அரசியல் தலைவனாக நடிப்பது இன்னும் நன்றாக இருக்கும் எனக் கருதியுள்ளார் போல.
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரது படம் சுமாராக இருந்தாலும் குறைந்தது 250 கோடிகளை அள்ளிவிடுகிறது, அத்தகு உயரத்தில் அவர் யார். இத்தகு சூழ்நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேரம் மக்கள் பணி செய்ய வருவது என்பது மிகவும் துணிச்சலான மற்றும் பாராட்டுக்குரிய விஷயம் தான்.