Thursday, January 2, 2025
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாநம்பிக்கை அளித்து கழுத்தை அறுத்துட்டாங்க.. கோட் ரீலீஸ் தேதியில் சிக்கல்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெங்கட்...

நம்பிக்கை அளித்து கழுத்தை அறுத்துட்டாங்க.. கோட் ரீலீஸ் தேதியில் சிக்கல்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெங்கட் பிரபு.. !

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் எவ்வளவு விரைவாக முடிக்கப்பட முடியுமோ அந்த அளவு வேகமாக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு போட்ட திட்டத்தில் ஒரு பெரிய மாறுபாடு காரணமாக தற்போது ரீலீஸ் தேதியில் சிக்கல் வந்துள்ளது.

- Advertisement -

இந்தப் படம் சயின்ஸ் ஃபிக்ஷன் வகையில் உருவாகுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதன் படி தான் சமூக வலைத்தளத்தில் செய்திகளும் இதுவரை வந்துள்ளன. இப்படத்தில் நடிகர் விஜய் மொத்தம் 3 கதாபாத்திரங்களில் வருகிறார்.

முதல் கதாபாத்திரம் அப்பாவாக, இரண்டாவது மகனாக மற்றொன்று கடைசியாக ஓர் கதாபாத்திரம் ஆனால் அது படத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே வருமென தகவல்கள் வந்துள்ளன. இதில் இளம் வயது விஜய்க்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறார்கள். ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விஜய்யின் வெங்கட் பிரபுவும் இதற்காகத் தான் அமெரிக்கா சென்றனர்.

- Advertisement -

அங்கு எடிட்டிங் காட்சிகளுக்கு தேவையானதை ஷூட் செய்துவிட்டு இருவரும் கிளம்பிவிட்டனர். அமெரிக்கா நிறுவனம் அனைத்துப் பணிகளையும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் முடித்துத் தருவதாக உறுதியளித்தனர், ஆனால் தற்போது அதில் ஒரு பெரிய சிக்கல். படத்தில் விஜய்க்கு மட்டும் இளமைத் தோற்றம் இல்லாமல் அவருடன் நண்பர்களாக வரும் பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன் ஆகியோருக்கும் அந்த தொழில்நுட்ப எடிட்டிங் தேவைப்படுகிறது.

- Advertisement -

இதனால் ஆகஸ்ட் 10க்கும் மேற்பட்டு சில் நாட்களில் தான் எடிட்டிங் முழுமையாக முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளனர். இது இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் செப்டம்பர் 5ஆம் தேதி திட்டமிட்டுள்ள ரீலீஸ் தள்ளிப் போகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தேதியை விட்டுவிட்டால் பின்னர் படத்தை இறக்க சிறப்பான தேதியே இல்லை. தீபாவளிக்கும் ஏற்கனவே 5 படங்கள் வரிசையில் உள்ளது. தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் படக்குழு உள்ளது.

Most Popular