மலையாளத் திரைப்படத்தில் நிறைய திரைப்படங்கள் நல்ல திரைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் அங்கமாலி டைரிஸ் திரைப்படத்திற்கு எப்பொழுதும் ஒரு மவுசு இருக்கும். காமெடி கலந்த ஆக்சன் திரில்லர் படமாக வந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றது.
இத்திரைப்படம் தற்பொழுது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வந்துள்ளது. அத்திரைப்படத்தில் நமது கோலிவுட்டை சேர்ந்த அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க போகிறார் என்கிற செய்தியும் தெரிய வந்துள்ளது.
முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ்
பாலிவுட்டில் ரீமிக்ஸ் செய்யப்படும் இத்திரைப்படத்தில் முன்னணி நாயகனாக அர்ஜுன் தாஸ் நடிக்கப் போகிறார். தமிழில் கைதி அந்தகாரம் மற்றும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அர்ஜுன் தாஸ் தற்போது சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து அனைவரிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றார்.
தனது ட்விட்டர் கணக்கில் அர்ஜுன் தாஸ் தான் பாலிவுட்டில் நடக்கப்போவதை உறுதி செய்துள்ளார். பாலிவுட்டில் இத்திரைப்படத்தை இயக்குனர் மதுமிதா ரீமேக் செய்யப் போகிறார். கேடி என்கிற கருப்பு துரை திரைப்படத்தை இயக்குனர் மதுமிதா இயக்கியது குறிப்பிடத்தக்கது.
நிச்சயமாக அர்ஜுன் தாஸ் தனது நடிப்பாற்றலால் பாலிவுட் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விடுவார் என்றும் பாலிவுட்டில் இனி அவருக்கு தனி மார்க்கெட் கிடைக்கப் போகிறது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துக் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.