Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாதயாராகி வரும் வாரிசு இசை வெளியீடு விழா ! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கவுள்ள அனிருத் !

தயாராகி வரும் வாரிசு இசை வெளியீடு விழா ! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கவுள்ள அனிருத் !

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தளபதி என்று போற்றப்படும் விஜய் தன்னுடைய அமைதியான நடிப்பாலும் அசத்தலான ஆக்சனாலும் துள்ளலுடன் கூடிய நடனத்தினாலும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறவர் . இவர் படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் திருவிழா தான் .. பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்பொழுது இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் வாரிசு .

- Advertisement -

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படும் இந்த படம் தெலுங்கின் வெற்றி இயக்குனர் வன்சி அவர்களால் இயக்கப்படுகிறது . இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது . ஏனென்றால் விஜயின் இதற்கு முந்தைய படமான பீஸ்ட் படத்திற்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்வின்போது கோவிட் லாக் டவுன் காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு அவர் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடானது டிசம்பர் 24ஆம் தேதி நடத்தப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தனர் . இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் . ஆனால் அந்த அறிவிப்பின்போது எங்கு நடத்தப்படும் போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை .

- Advertisement -

இந்நிலையில் தளபதியின் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு நேரு உள் விளையாட்டரங்கில் டிசம்பர் 24ஆம் தேதி நடத்தப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது . மேலும் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக வாரிசு படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் பாடி வெளியிடுவார் என்று தெரிகிறது . இந்த வருடத்தின் கிறிஸ்மஸ் கொண்டாட்டமானது தளபதியின் வாரிசு பாடல்களோடு கொண்டாடலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் . ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் . வாரிசு படத்தின் பாடல் உரிமைகளை டீ- சீரிஸ் வாங்கியுள்ளது. வாரிசு படமானது ஜனவரி மாதம் பன்னிரண்டாம் தேதி பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது .

- Advertisement -

Most Popular