Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவாரிசு ட்ரைலர் எப்போது? இந்த தேதியில் ரீலிசாகும்.. முழு விவரம்

வாரிசு ட்ரைலர் எப்போது? இந்த தேதியில் ரீலிசாகும்.. முழு விவரம்

- Advertisement -

பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா கடந்த 24 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் உடைய இசையமைப்பாளர் தமன் அனைத்து பாடல்களையும் சிறப்பாக அமைத்திருக்கிறார் என்ற கருத்துக்களும் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தைப் பற்றி எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. அதிலும்  இசை வெளியீட்டு விழாவின் போது தளபதி ரசிகர்களுடைய கூட்டத்தை பார்த்து வாரிசு திரைப்படத்தின் உடைய வெற்றியின் ஓரளவு கணிக்க முடிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தின் உடைய ட்ரெய்லர் வருகின்ற ஜனவரி மாதம் 2023 ஆம் ஆண்டு இரண்டு அல்லது மூன்று தேதிகளில் வெளியாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதற்கு முன்பு வாரிசு திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லோக் செகண்ட் லுக் அதைத் தொடர்ந்து ரஞ்சிதமே என்ற தளபதி விஜய்யினுடைய குரலிலே வெளியான பாடல் என்று வாரிசு திரைப்படத்தை பற்றிய அனைத்து விஷயத்திலும் ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டியும் அவற்றை கொண்டாடியும் வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதனைத் தொடர்ந்து வருகின்ற ஆண்டின் தொடக்கத்திலேயே தளபதியினுடைய திரைப்படத்தின் டிரைலர் வெளியாக இருப்பது தளபதி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்றும் மேலும் திரும்பும் இடமெல்லாம் வாரிசு திரைப்படமாகத்தான் இருக்கும் என்பது சந்தேகமே இல்லை.

மேலும் இந்த திரைப்படத்தின் பாப்பா பாப்பா என்ற ஒரு பாடல் மட்டும் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வரும் ஒன்றாம் தேதி மாலை 6:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular