Monday, December 16, 2024
- Advertisement -
Homeசினிமாபட்டையை கிளப்ப போகும் துணிவு-புதிய அப்டேட் வெளியிட்ட ஒளிப்பதிவாளர்!

பட்டையை கிளப்ப போகும் துணிவு-புதிய அப்டேட் வெளியிட்ட ஒளிப்பதிவாளர்!

தளபதி நடித்த தலைவா  ஆர்யா நடிப்பில் வெளியான  மதராசபட்டினம்  சித்தார்த் நடித்த காவியத்தலைவன்  போன்ற வெற்றி படங்களில்  ஒவ்வொரு காட்சிகளையும்  ஓவியம் போல  மிக அழகாக படம் ஆக்கி இருப்பார் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. மேலும் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அயலான் மற்றும் துப்பறிவாளன் 2 போன்ற படங்களுக்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர் ஆக  ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

- Advertisement -

தல அஜித்தின் வலிமை படத்தில் இவர் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். தற்போது அஜித் குமாரின் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படத்திற்கும்   இவர் தான் ஒளிப்பதிவாளர். துணிவு படம், இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து  வருகின்ற ‘தை’ திங்கள் அன்று வெள்ளித்திரைக்கு வர தயாராக இருக்கிறது. இப்படத்திற்கான  ஆடியோ வெளியீடு பற்றி  ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் .

இந்தப் படமானது  ஆங்கில பட பாணியில் வங்கிக் கொள்ளையை  மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக  செய்திகள் கசிந்து வருகின்றன . இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தல ரசிகர்களிடையே  அதிகமாக இருக்கிறது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் என்றால்  கண்டிப்பாக ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருக்கும் . இதனால் இப்படம்  மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது .

- Advertisement -

இந்நிலையில் இப்படத்தைப் பற்றிய புதிய தகவல் ஒன்றை  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின்  ‘ஆர்வ  தீ’யை மேலும் கொழுந்து வெட்டி எறிய செய்து இருக்கிறார்  படத்தின் ஒளிப்பதிவாளர்  நீரவ்ஷா. இன்று காலை ” ஒரு விஷயத்தை பார்த்தேன்  நிறைய பட்டாசு வாங்கிக் கொள்ளுங்கள்  நிறைய நிறைய பட்டாசுகளை வாங்கிக் கொள்ளுங்கள்  அவை அதிகமாக தேவைப்படும்” என்று  தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்தப் பதிவானது அஜித் ரசிகர்களால் வைரலாக பரப்பப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து  துணிவு படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரெடியாகி இருக்கலாம் என்றும் அதனைப் பார்த்துவிட்டு தான் படத்தின் ஒளிப்பதிவாளர்  இப்படிப் பதிவிட்டு இருக்கிறார் என்றும், துணிவு படம்  பட்டையைக் கிளப்ப தயாராகி விட்டது வெடி வெடித்து கொண்டாட தயாராக தல ரசிகர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே தளபதி விஜயின்  வாரிசு படத்திற்கான  ஆடியோ ரிலீஸ் சமீபத்தில்  நேரு உள் விளையாட்டு அரங்கில்  வெளியிடப்பட்டு அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தல அஜித்தின் துணிவு  படத்திற்கான ஆடியோ மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகி தல ரசிகர்களுக்கு திருவிழாவாக அமையும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular