மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்து கொண்டிருப்பவர் நிவின் பாலி . இவர் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமானார் . தமிழில் நேரம் ,ரிச்சி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் .
இவரும் துல்கர் சல்மானும் இணைந்து நடித்த பெங்களூர் டேஸ் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக இவர் உடல் பருமன் பிரச்சனையின் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
சிறிது நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நேர்காணலின் போது கூட தான் உடல் பருமனாக இருப்பது பற்றி எந்தக் கவலை இல்லை என்றும் அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறியிருந்தார் . உடல் கேலிகளுக்கெல்லாம் நான் கவலைப்பட போவதில்லை என்றும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது இவர் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளின் மூலம் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து பிட்டாகி இருக்கிறார் . இவருடைய இந்த மாற்றமானது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது . கடந்த வருடம் தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர்களும் தன்னுடைய உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
Latest 🤘😌
— Sravan NANDAKUMAR (@SravanNandakum6) January 2, 2023
2023 ! 🔥⏳#NivinPauly #latest #Thalapathy67𓃵 # pic.twitter.com/W0OZdPMuwo
இதனால் ஆச்சரியமான அவரது ரசிகர்கள் அவரது இந்த புகைப்படங்களை ட்விட்டரிலும் மற்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் . இவருக்கு இந்த வருடத்தில் ஆக்சன் ஹீரோ பிஜு 2, எடிசன் போட்டோஸ், கௌரி போன்ற திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை வைத்து இயக்கப் போகும் தளபதி 67 படத்திலும் நிவின் பாலி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது