தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான தல அஜித் மற்றும் தளபதி விஜயின் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் நாளை வெளியாக இருக்கின்றன. இதற்காக ரசிகர்கள் இப்போது இருந்தே தயாராகி வருகின்றனர். பொதுவாகவே பெரிய நட்சத்திரங்களின் படங்கள் என்றால் முதல் இரண்டு வாரங்களுக்கு காலை நாலு மணியிலிருந்து சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜயின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. தல தளபதி போட்டி என்றால் எப்போதுமே பொறி பறக்கும் ரசிகர்களிடம். அதேபோன்று ஒரு போட்டிதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வலிமை படத்தினை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் படம் துணிவு இந்தப் படத்தை பாலிவுட் இன் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் தமிழில் சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று போன்றபடங்களை இயக்கிய வெற்றியை இயக்குனர் வினோத் அவர்கள் தொடர்ந்து அஜித்குமாரை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும். வங்கிக் கொள்ளையை வைத்து ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி போன்ற முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் டெய்லரில் பெரும் சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவில் பெரிய வெற்றியை பெறவில்லை இதனால் மிகப்பெரிய ஒரு வெற்றியை கொடுக்க தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான வம்சியுடன் இணைந்தார் தளபதி விஜய் . இந்தப் படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்திருந்தார் . பெரிய நட்சத்திரக் கூட்டங்களுடன் தயாராகி இருக்கும் இந்த படமும் நாளை வெளியாக இருக்கிறது.
இந்த இரண்டு படங்களுமே டைலர் பாடல்கள் என நேருக்கு நேர் போட்டியில் ஈடுபட்டு வந்தன. இதற்கெல்லாம் இறுதி போட்டி போன்று நாளை இரண்டு படங்களும் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான சிறப்பு காட்சிகள் காலை 4 மணியிலிருந்து தொடங்க உள்ளன. முதல் சில வாரங்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ப்ரீ புக் செய்யப்பட்டு விட்டன .
இந்நிலையில் இந்த இரண்டு படத்தின் ரசிகர்களுக்கும் பெருமகிழ்ச்சியாக ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்தப் படத்தின் காலை நாலு மணிக்கு மற்றும் 5:00 மணிக்கு திரையிடப்பட இருந்த சிறப்பு காட்சிகளை பொங்கல் தினங்களில் தடை செய்திருக்கின்றது தமிழக அரசு. பொங்கல் தினங்களான 13 14 15 16 ஆகிய தேதிகளில் துணிவு மற்றும் வாரிசு படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது. பொங்கல் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.