Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசு படத்தின் நீளம் ரசிகர்களுக்கு தொய்வை கொடுத்திருக்கிறதா ?- எடிட்டர் பிரவீன் பதில்!

வாரிசு படத்தின் நீளம் ரசிகர்களுக்கு தொய்வை கொடுத்திருக்கிறதா ?- எடிட்டர் பிரவீன் பதில்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரசிகர்களை கொண்டிருப்பவர் தளபதி விஜய்.சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான படம் வாரிசு . இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவைச் சார்ந்த பிரபல இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கியிருந்தார்.

- Advertisement -

ஜனவரி பதினொன்றாம் தேதி வெளியான இந்த திரைப்படம் ஆனது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது . குறிப்பாக குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இந்தத் திரைப்படம் வந்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர் .

இந்த திரைப்படத்தில் விஜய் ரஷ்மிக்கா மந்தானா சரத்குமார் ஷாம் பிரகாஷ் ராஜ் ஸ்ரீகாந்த் யோகி பாபு உன்னிடம் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர் . நடிகர் பிரகாஷ்ராஜ் வில்லத்தனமான கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவர் . இந்தப் படத்தில் அவரையே ஒரு பாசமிகு தந்தையாக காட்டி இது பிரகாஷ்ராஜ் என்றாலே இந்த கதாபாத்திரம் தான் நினைவிற்கு வரும் அளவிற்கு எமோஷனலாக ஒன்றி போக வைத்திருக்கிறார் இயக்குனர் .

- Advertisement -

இந்தத் திரைப்படத்தின் நீளம் தான் படத்தின் மைனஸ் பாயிண்டாக கருதப்பட்டது . தற்போது இந்த படம் குறித்து பேட்டியளித்துள்ள படத்தின் எடிட்டர் பிரவீன்.கேஎல் படத்திற்கு தேவையான நிலம்தான் இது என்று குறிப்பிட்டுள்ளார் . இது பற்றி பேசி உள்ள அவர் தான் இயக்குனர் வம்சியுடன் இணைந்து இதற்கு முன் பணியாற்றி இருப்பதாகவும் அதனால் வம்சியின் துறை நுட்பங்கள் தனக்கு தெரியும் என்றும் கூறியிருக்கிறார் . நிச்சயமாக வம்சி ரசிகர்களுடன் இந்த திரைப்படத்தை எமோஷனலாக கனெக்ட் செய்து விடுவார் என்று தான் உறுதியாக நம்பியதாகவும் அதை இயக்குனர் செய்து காட்டி சாதித்து விட்டார் என்றும் கூறியிருக்கிறார் .

- Advertisement -

படத்தின் நீளம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் இந்தப் படமானது ஒரு ஃபேமிலி சென்டிமென்ட் வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் இதில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன . அதனால் அதிக அளவு நீளத்தை குறைத்தால் அது படத்தின் கதையை பாதிக்கும். இந்திய சினிமாவில் இதற்கு முன் வந்த மேரே நாம் ஜோக்கர் என்ற படம் நான்கு மணி நேரமும் 30 நிமிடங்களும் இருக்கும். அதேபோலத்தான் வாரிசு படத்தின் ஆரம்ப கட்ட புட்டேஜ்களும் 4:30 மணி நேரத்திற்கு மேல் இருந்தது. அதை எங்களால் முடிந்த வரை ட்ரிம் செய்து கதைக்கு கொஞ்சம் விலகிச் செல்லும் காட்சிகளை நீக்கிவிட்டு இறுதி கட்ட படத்தை முடிவு செய்தோம் .மேலும் இந்த படமானது இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் ஓடுவதாக இருந்தாலும் எந்த ஒரு தெய்வம் இல்லாமல் படம் விறுவிறுப்பாகவே செல்வதாக கூறினார் ரசிகர்களிடமும் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தார் .

இது போன்று ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு தளபதி விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியவர் நீண்ட நாட்கள் கழித்து இது போன்ற ஒரு ஃபேமிலி சப்ஜெக்டில் தளபதியை பார்த்தது வித்தியாசமான மற்றும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாக கூறினார். பொதுவாக படத்தில் வேகத்தை குறைக்கின்ற எல்லா விஷயங்களையும் நாங்கள் நீக்கி விடுவோம் . அதுபோல இந்த படத்தின் காட்சிகள் மூன்று மணி நேரங்களுக்கு மேல் வந்தது . ஒரு சில விஷயங்களை காம்ப்ரமைஸ் செய்து இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களுக்கு வருமாறு படத்தின் அளவை குறைத்ததாக கூறினார் . படம் வெளியாகி முதல் இரண்டு நாட்களில் மிகவும் மெதுவாக செல்வது போல் தோன்றினாலும் மூன்றாம் நாள் வாரிசு பாக்ஸ் ஆபிஸ் பந்தயத்தில் பட்டையை கிளப்ப ஆரம்பித்து விட்டது என்று கூறலாம் .

Most Popular