விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தளபதி 67 படக் குழுவினர் இந்தப் படத்தின் வெளியீட்டுக்குத் தான் காத்திருந்தனர், பின்னரே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் அப்டேட்களை வழங்க முடியுமென்ற சூழ்நிலையில் இருந்தனர்.
இடைப்பட்ட காலத்தில் படத்தின் அறிவிப்பு டீஸர் ஷூட்டிங்கை முடிந்து வைத்துள்ளனர். இன்னும் 10 நாட்களில் நாம் முதல் அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு சென்னையில் முதல் அட்டவணை முடிவடைந்துள்ளது. அடுத்ததாக படக்குழுவினர் காஷ்மீரில் 25 நாட்கள் தொடர்ந்து படம்பிடிக்க உள்ளனர். பல்வேறு ஆக்க்ஷன் காட்சிகள் அங்கே நடைபெறவுள்ளது.
தளபதி 67 திரைப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. படத்தில் நட்சத்திர பட்டாளமே பங்கேற்கிறது. இப்போது வரை சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், ரக்ஷித் ஷெட்டி, மிஷ்கின் ஆகியோர் நிச்சயமாக இருப்பது உறுதியாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் கூட தளபதி விஜய்யுடன் இணைந்து நடியத்தை நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் பகிர்ந்தார். அது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் தூக்கி வாரிப் போட்டது.
இப்படத்தில் முடக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க முதன் முதலாக சியான் விக்ரமிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்றார். மிகச் சிறிய ரோல் என்பதால் அதை விக்ரம் மறுத்துவிட்டார். பின்னர் விஷாலிடம் அணுகிய போது தேதிப் பிரச்சினை காரணமாக அதுவும் மறுக்கப்பட்டது. கடைசியாக லோகேஷ் கனகராஜின் தேடலுக்கு நடிகர் அர்ஜுன் முற்றுப்புள்ளி வைத்தார்.
விக்ரம் இந்த ரோலை மறுத்தது சற்று வருத்தம் தான். அதை விட கொடுமை என்ன வென்றால், இயக்குனர் லோகேஷ் இதற்கு முன் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை செய்யுமாறு ஏற்கனவே சென்றாராம். அதுவும் குறைவான ரோல் எனச் சொல்லி மறுத்துவிட்டாராம் விக்ரம். சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாப்பாத்திரம் திரையரங்கை அதிர வைத்ததோடு பல நடிகர்களின் பாராட்டுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர் காலத்தில் எல்.சி.யூ மூலம் ரோலக்ஸ்க்கு தனி திரைப்படம் செய்ய வாய்ப்புள்ளது, அதனால் மிகுந்த நடிப்புத் திறன் கொண்ட விக்ரமுக்கு அது மிகப் பெரிய நஷ்டம் தான்.
முதலில் ரோலக்ஸ் இப்போது தளபதி 67 – லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த விக்ரம்… ! காரணம் இதுதான்… !