தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் இயக்குனராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் பல தரமான திரைப்படங்களை சினிமாவுக்கு வழங்கி இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் கௌதம் கார்த்திக்கை வைத்து தயாரித்து வரும் படம் ஆகஸ்ட் 16 1947. இந்திய விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தற்போது இறுதி கட்டப் படப்பிடிப்புகளை நெருங்கி இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து பர்பிள் புல் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனமும் ஓம்பிரகாஷ் பட் மற்றும் நரேஷ் சௌத்ரி ஆகியோரின் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. பெரும் பொருட்செலவில் பான் இந்திய சினிமா ஆக இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் ரேவதி என்பவர் புதுமுக நாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்தத் திரைப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரிச்சர்ட் ஆஸ்டன் என்ற ஹாலிவுட் நடிகர் நடித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது இத்தனை படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டிருந்தார். சுதந்திர போராட்ட கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. சுதந்திரப் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இத்திரைப்படத்தின் டீசர் புதுமையாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இருந்தது. இத்திரைப்படத்தை பொன் குமார் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் விரைவில் இதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இத்திரைப்படம் பிரம்மாண்டமாக பான் இந்தியா சினிமாவாக உருவாகி வருகிறது. இதன் காரணமாக இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் இத்தரைப்பட குழுவினர் பிரச்சினை பற்றிய புதிய அப்டேட் ஒன்றினை இன்று வெளியிட உள்ளதாக ட்விட்டரில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். கௌதம் கார்த்திக்கின் பத்து தல திரைப்படத்திற்கான அப்டேட் இன்று வெளியாகும் நிலையில் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தின் அப்டேட்டும் இன்று வெளியாக உள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.
இத்திரைப்படம் தொடர்பான அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் படக்குழுவினர் அதில்” இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சொல்லப்படாத கதையைப் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எல்லோரும் சொல்ல தயங்கிய கதை எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தினை பற்றிய புதிய அறிவிப்பிற்காக சினிமா ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.