Monday, November 18, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா“நடிகர் அஜித்குமார் மட்டும் அவருடைய பட ப்ரொமோஷனுக்கு வருகிறாரா?” - கேள்விக்கு இயக்குனர் அமீரின் சர்ச்சையான...

“நடிகர் அஜித்குமார் மட்டும் அவருடைய பட ப்ரொமோஷனுக்கு வருகிறாரா?” – கேள்விக்கு இயக்குனர் அமீரின் சர்ச்சையான பதில்

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். 90களில் தொடங்கி இன்று வரை தனது திறமையால் தல அஜித் குமார் என்று பெற்ற பெயரை தக்க வைத்து வருகிறார். அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் இன்றைய தினத்தோடு 100 நாட்களைக் கடந்து, அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் திரையரங்குகளில் ஒரு திரைப்படம் ஓரிரு வாரங்கள் ஓடுவதே மிகவும் அபூர்வமான ஒன்றாகும். அந்த வகையில் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவை விட பெரு வெற்றி பெற்றது ஆனால் நடிகர் அஜித்குமார் பொதுவாக எந்த பட ப்ரொமோஷன்களுக்கும் வருவதில்லை. அதனால் இவர் மீது எப்பொழுதுமே ஒரு சிலர் அதிருப்தி தெரிவிப்பது உண்டு அந்த வகையில் இயக்குனர் அமீர் தற்போது அது பற்றி பேசி உள்ளார்.

- Advertisement -

மதுரையில் பிறந்து வளர்ந்த இயக்குனர் அமீர் பொறியியல் படித்து, இயக்குனர் பாலாவிடம் துணை இயக்குனராக தனது திரையுலக வாழ்வை தொடங்கினார். மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் அமீர். முதல் திரைப்படமே அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களை இயக்கியும், திரைப்படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் அமீர். இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் நடிகர் அஜித்தை பற்றி கேள்வி எழுப்ப அவரும் அதற்கு பதில் அளித்து இருந்தார்.

- Advertisement -

நடிகர் விமல் நடிப்பில் வெளியாக இருக்கும் குலசாமி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பத்திரிகையாளர் அவரிடம் நடிகர் அஜித்குமார் ஏன் அவர் நடிக்கும் பட ப்ரமோசன்களில் கூட கலந்து கொள்வதில்லை என்று கேட்டதற்கு, இயக்குனர் அமீர் ” அஜித் குமார் அவரின் திரைப்பட பிரமோஷன் எனக்கு போவதும், போகாமல் இருப்பதும் அவருடைய விருப்பம் அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்று கூறினார்

- Advertisement -

தொடர்ந்து பேசிய அவர் “பொதுவாகவே இப்போது இருக்கும் காலகட்டத்தில் பெரிய பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் எல்லோரும் தங்களுடைய படத்திற்காக பிரமோஷன் செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது சின்ன நடிகர்களும், இயக்குனர்களும் படத்தின் வெற்றிக்காக ப்ரோமோஷன் செய்வதில் தவறில்லை. இது மட்டும் தான் என்னுடைய கருத்து ” என்று கூறினார்.

Most Popular