Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஷாரூக்கான்.. எவ்வளவு தெரியுமா? டாப் 5 யார்?

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஷாரூக்கான்.. எவ்வளவு தெரியுமா? டாப் 5 யார்?

- Advertisement -

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை ஷாருக் கான் பெற்றுள்ளார். பாலிவுட், கோலிவுட்,டோலிவுட், சாண்டல் வுட், பாலிவுட் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகிறதும்.

கடந்த சில மாதங்களாக இந்தி படங்கள் படுதோல்வி அடைந்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு ரிலீசான பெரிய நடிகர்களின் படம் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தெலுங்கு, கன்னடம், தமிழ், படங்கள் எல்லாம் வசூலில் வாரிக் குவித்தது. குறிப்பாக ட்ரிபிள் ஆர் ,பாகுபலி, கே ஜி எஃப்,விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் எல்லாம் தேசிய அளவில் அதிக வசூலை பெற்றன.

- Advertisement -

இதனால் அடி பாதாளத்தில் இருந்த ஹிந்தி சினிமாவை நடிகர் ஷாருக்கான் தனி ஆளாக நின்று காப்பாற்றினார். அவர் நடித்த பதான் திரைப்படம் உலகம் முழுவதும் ஹிட்டாகி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதன் மூலம் ஹிந்தி சினிமாவுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது.

- Advertisement -

தற்போது நடிகர் ஷாருக் கான், அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்று பெருமையை ஷாருக்கான் பெற்றிருக்கிறார். பத்தான் படத்தில் ஊதியமாக படத்தின் லாபத்தில் இருந்து சில சதவீதத்தை நடிகர் ஷாருக்கான் சம்பளமாக பெற்றுள்ளார். இதன் மூலம் பதான் படத்திற்கு அவர் 200 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் நம்பர் ஒன் நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் 130 கோடி ரூபாய் லியோ படத்திற்காக வாங்கி இருக்கிறார். அதன் பிறகு நடிகர் கமலஹாசன் 120 கோடி ரூபாயும்,நடிகர் அஜித் 110 கோடி ரூபாயில் சம்பளமாக வாங்கி இருக்கிறார்கள். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ரஜினி தொடர் தோல்வி காரணமாக டாப் ஐந்து இடத்தை இழந்தார். தற்போது ஜெய்லர் படத்திற்கு ரஜினி பெரும் 70லிருந்து 80 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular