தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் . குழந்தையின் நட்சத்திரம் ஆக அறிமுகம் ஆகிய இவர் 2013 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகம் ஆகி இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் . இவருக்கு மகாநதி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது . கடந்த மார்ச் மாதம் இவரது நடிப்பில் வெளியான தசரா என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .
பிரபல நடிகைகள் என்றாலே கிசுகிசுவிற்கும் பஞ்சம் இருக்காது அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் மீதும் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வருகின்றன . பைரவா மற்றும் சர்க்காராகிய திரைப்படங்களில் தளபதி விஜய் உடன் சேர்ந்து நடித்திருந்தார் . இது தொடர்பாக இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்தவிட்டு கீர்த்தி சுரேஷ் உடன் வாழ இருப்பதாகவும் அந்த செய்திகள் பரவி வந்தன . தற்போது அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் கீர்த்தி சுரேஷை பற்றிய மீண்டும் ஒரு கிசுகிசு சினிமா வட்டாரங்களில் வேகமாக பரவி வருகிறது .
அவர் நடிக்க வந்த காலத்தில் இருந்தே தனது பள்ளி நண்பரை காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன . இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும் வந்த செய்திகள் தெரிவித்தன . தற்போது அந்த செய்திகள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . இது தொடர்பாக ரசிகர்களும் சினிமா வட்டாரத்தைச் சார்ந்தவர்களும் பல்வேறு விதமான செய்திகளை பரப்பி வருகின்றனர் . தற்போது சினிமா வட்டாரத்தில் இந்த செய்தி தான் மிகப் பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது .
ஃபர்கான் என்பவர் கீர்த்தி சுரேஷின் பள்ளி கால நண்பர் . இவரும் கீர்த்தி சுரேஷ் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர் . சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியானது . இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாகவும் இவர் தான் கீர்த்தி சுரேஷின் நீண்ட கால காதலர் எனவும் செய்திகள் வெளியாக துவங்கின . ஆனால் இந்த செய்திகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . அவர்கள் இருவரும் நண்பர்கள் தான் எனவும் சினிமா வட்டாரத்தில் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர் .
இதுவும் வழக்கம் போல் ஒரு நடிகை பற்றிய வதந்தியாக இருக்கும் என பெரும்பாலானவர்கள் தெரிவித்து வருகின்றனர் . ஆனால் சிலரோ இருவரும் காதலர்கள் தான் என கூறிவரும் நிலையில் உண்மை எதுவென்று தெரியவில்லை . கடந்த சில ஆண்டுகளாகவே இவர் தீவிரமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் சைரன் மற்றும் ரகு தாத்தா போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் .