அமைதியாக இருந்த கோலிவுட் வட்டாரம் தற்போது மீண்டும் தளபதி 68 படத்தின் அறிவிப்பால் பரபரப்பாகி இருக்கிறது. யாருமே எதிர்பாராத வகையில் திடீரென்று தன்னுடைய அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.
இதில் வெங்கட் பிரபு இயக்குனராகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகவும் பணியாற்றுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இதனால் அஜித்துக்கும் வெங்கட் பிரபுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இதனால் தளபதி 68 திரைப்படத்தில் அஜித் கேமியோ ரோல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க வாய்ப்பு கிடைத்ததை அவர்களது நண்பர்கள் கேக் கட்டி கொண்டாடினர்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் தொடர்பான அப்டேட்டுகள் தற்போது ஏதும் வெளிவராது.
லியோ படம் வெளியான பிறகு தான் தளபதி 68 தொடர்பான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும். இந்தப் படத்தில் நடிகர் அஜித் கேம்யோ ரோல் செய்வார் என்று செய்தி பரவி வருகிறது. அதில் உண்மையில்லை நடிகர் அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய தந்தையின் ஆசை.
ஆனால் இந்த படத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என வெங்கட் பிரபு ஆரம்பத்தில் விளக்கம் கொடுத்து ஆப் செய்து விட்டார். வெங்கட் பிரபு மாநாடு போன்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்தாலும் கஸ்டடி அவருக்கு பெரிய தாக்கத்தை தரவில்லை.
இதனால் வெங்கட் பிரபுவை நம்பி ஏன் விஜய் இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தார். எனும் சிலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கு அப்படி ஒரு மிகப்பெரிய ஹிட் பெற்று தருவார் என எதிர்பார்ப்பு இருந்துள்ளது.