Sunday, July 6, 2025
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாரூ.15 லட்சம் மதிப்பிலான பைக்கை பரிசளித்த நடிகர் அஜித்

ரூ.15 லட்சம் மதிப்பிலான பைக்கை பரிசளித்த நடிகர் அஜித்

துணிவு திரைப்படத்திற்குப் பிறகு தல அஜித் தன்னுடைய அடுத்த படமான ஏகே 62 திரைப்படம் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பல குழப்பங்களை தாண்டி தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற தலைப்பில் இத்திரைப்படம் இயக்கப்பட இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தத் திரைப்படம் ஒரு சிறந்த படமாக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த திரைப்படத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி திரைக்கதை எழுதி வருகிறார். இயக்குனர் மகிழ்திருமேனி இதனால் இத்திரைப்பட இயக்குவதற்கு சற்று தாமதமாகி இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணத்தால் தற்பொழுது தல அஜித் உலகம் முழுவதையும் பைக்கிலே சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது பயணத்தை துவங்கியிருக்கிறார். அதில் ஏறத்தாழ இந்தியா முழுவதும் சுற்றி வந்துவிட்டார். நேபால், பூட்டான் போன்ற இடங்களில் இவர் சுற்றி வந்த வீடியோக்கள் ஒரு சிலவை இணையத்தில் பரவி வருகிறது.

- Advertisement -

இதை அவருடைய ரசிகர் எவரோ பின் தொடர்ந்து எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் மேற்கொண்டு இருக்கும் இந்த பயணத்தை பற்றிய ஆவண வீடியோக்கள் ஏதாவது வெளியிடப் போகிறார்களா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் வெளியாகி இருக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க நடிகர் அஜித் தற்பொழுது ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு செயலை செய்திருக்கிறார். தல அஜித் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் ஒரு பைக் ரைடர் என்பதும் ரசிகர்கள் அறிந்தவை தான் .அதில் தற்பொழுது தன்னோடு ரைடில் ஈடுபடும் ஒரு சக ரைடருக்கு 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு பைக்கை தற்பொழுது பரிசாக அளித்திருக்கிறார்.

தல அஜித் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.மேலும் இதுபோன்று பைக்கில் வேர்ல்ட் டூர் செய்ய நினைப்பவர்களுக்கு உதவிடும் வகையில் தல அஜித் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தின் மூலம் அவர்கள் தங்குவதற்கும் பயணிப்பதற்கும் தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

இவ்வாறான செயல்களின் மூலம் இது போன்ற வேர்ல்ட் டூர் செய்வதின் மீது பலரும் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். அதிலும் சாதாரணமாக ஒரு நடிகனின் ரசிகர்கள் என்றால் அவரைப் போன்று சிகை அலங்காரம் செய்து கொள்வது உடையணிந்து கொள்வது நடப்பது பேசுவது போன்ற எல்லா விஷயத்திலும் அவர்களை ரோல் மாடலாக வைத்து நடந்து கொள்வார்கள்.அதேபோன்று  தல ரசிகர்கள் தல அஜித் தற்பொழுது செய்து வரும் இந்த வேர்ல்ட் டூரி குறி வைத்து கிளம்பி விடுவார்கள் என்று தோன்றுகிறது.

Most Popular