Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவீரன் திரைப்படத்தால் ஏமாற்றம்.. முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

வீரன் திரைப்படத்தால் ஏமாற்றம்.. முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

மரகத நாணயம் திரைப்படத்தை இயக்கிய ஏ ஆர் கே சரவணன் தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாக வீரன் என்ற படத்தை இயக்கினார்.இதில் ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்கிறார். மின்னல் தாக்கப்பட்ட சிறுவனுக்கு விசேஷ சக்திகள் கிடைக்கிறது.

- Advertisement -

அதனை வைத்து அவன் என்ன செய்கிறான் ஊர் மக்களை காப்பாற்றுகிறானா என்பதை இந்த படம் பேசுகிறது. மலையாளத்தில் வந்த மின்னல் முரளி திரைப்படத்தின் பாணியில் வீரன் இருப்பதாக ரசிகர்களிடம் விமர்சனம் எழுந்தது.

- Advertisement -

எனினும் இது மின்னல் முரளி திரைப்படத்துடன் வித்தியாசமானது என்று பட குழு விளக்கம் ஒன்றை அளித்தது. இந்த நிலையில் வீரன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

- Advertisement -

மரகத நாணயம் படத்தில் காமெடி காட்சிகள் சிறப்பான அளவில் இருக்கும். ஆனால் வீரன் திரைப்படத்தில் காமெடி சரியாக மக்களிடம் சேரவில்லை. மேலும் பழைய கதையை தூசி தட்டி இயக்குனர் எடுத்திருக்கிறார்.

இதைப் போன்று படத்தில் சில காட்சிகள் மட்டுமே ரசிக்கும் வகையில் இருப்பதாலும் படம் முழுவதும் நீளமாக இருப்பதாக குற்றச்சாட்டும் விழுந்தது. இதனால் கலவையான விமர்சனத்தை பலரும் தெரிவித்ததால் படத்தின் முதல் நாள் வசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

வீரன் திரைப்படம் முதல் நாளில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் தான் வசூல் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஹிப் ஹாப் ஆதி படத்தின் முந்தைய படத்தைவிட ஒப்பிட்டு பார்க்கும்போது குறைவுதான் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப் போன்று ஆர்யா நடித்துள்ள காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்க திரைப்படத்தின் வசூலும் பெரிய அளவில் இல்லை என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.

Most Popular