தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார் இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் . தற்போதும் ஏராளமான ரசிகர்களுடன் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் அமர்க்களம் திரைப்படத்தை தொடர்ந்து அஜித் குமார் மற்றும் லைலா நடிப்பில் உருவான திரைப்படம் தீனா. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது அஜித் குமாரின் திரைத்துறை பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக இது அமைந்தது என்றால் மறுக்க முடியாது . இது திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் . இந்தத் திரைப்படத்தின் வெற்றி அஜித் குமாரை ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் உயர்த்தியது .
இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் முருகதாஸ். மேலும் தீனா திரைப்படத்தின் மூலம் தான் அவர் இயக்குனராக அறிமுகமானார் . அதற்கு முன்பு இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . தீனா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி முருகதாஸை ஒரு வெற்று இயக்குனராக உயர்த்தியது . அஜித் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தீனா படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் தனது இரண்டாவது திரைப்படத்தையும் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றார் தீனா முருகதாஸ் .
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ரமணா திரைப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்தது . இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புரட்சி கலைஞர் விஜயகாந்த் இருக்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது ரமணா . கோலிவுடில் இரண்டு டாப் ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்ததால் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் தீனா முருகதாஸ் . தனது மூன்றாவது திரைப்படத்தை அஜித் குமாருடன் இணைந்து இயக்கி வந்தார் மிரட்டல் என்று பெயரிடப்பட்ட அந்த திரைப்படம் சில காரணங்களால் இடையிலேயே நின்று போனது . அதன் பிறகு தான் அஜித்திற்கு அந்தத் திரைப்படத்தின் கதை பிடிக்கவில்லை என்று தெரிய வந்தது .
இதனைத் தொடர்ந்து மற்றொரு முன்னணி ஹீரோவிடம் அதே கதையை கூறி வாய்ப்பு கேட்டிருக்கிறார் முருகதாஸ் இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் என்றும் பார்க்காமல் அந்த நடிகர் மிகவும் அசால்டாக கதை கேட்டு இருக்கிறார் அந்த நடிகர் தான் மாதவன் . பிறகு அவரும் தனக்கும் கதை பிடிக்கவில்லை என்று கூறி இந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டார் . இந்நிலையில் தான் மறைந்த முன்னாள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மனோபாலா நடிகர் சூர்யாவின் அப்பாயின்மென்ட் வாங்கி முருகதாஸ்ஐ அழைத்துச் சென்றிருக்கிறார்.
படத்தின் முழு கதையையும் கேட்டு சூர்யா நானே நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டு குறித்த நேரத்தில் நடித்தும் முடித்திருக்கிறார் . மேலும் இந்தத் திரைப்படத்திற்காக மொட்டை அடித்து கடினமான உடற்பயிற்சி செய்து தன்னுடைய கெட்ட பையன் முழுவதுமாக மாட்டின் றடித்தார் . அவரது கடின உழைப்பிற்கு ஏற்ப அந்த திரைப்படமும் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . சூர்யா மற்றும் அசின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கஜினி திரைப்படம் தான் அது . இரண்டு முன்னணி ஹீரோக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அந்த நேரத்தில் வளர்ந்து வந்த இளம் ஹீரோவான சூர்யாவின் நடிப்பால் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இது திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அமீர்கான் திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யாவை அவரது வீட்டிற்கே வந்து பாராட்டி விட்டு சென்றார் . மேலும் இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்து பாலிவுட் சினிமாவிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்று சினிமா மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு குறிப்பிட்டுள்ளார் .