Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஎன்னை மண்டையில் அடிக்க விஜய் ஒப்பு கொள்ளவில்லை..ரகசியத்தை பகிர்ந்த மிஷ்கின்

என்னை மண்டையில் அடிக்க விஜய் ஒப்பு கொள்ளவில்லை..ரகசியத்தை பகிர்ந்த மிஷ்கின்

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தக்கூடிய திரைப்படமென்றால் அது லியோ தான். இதில் நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்று லியோ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து மிஸ்கின் பேசி இருக்கிறார்.

அதில் நான் நடிகர் விஜயை 23 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி பார்த்தேனோ, அதேபோல் தான் இன்னும் இருக்கிறார். அதே மரியாதை, அதே பணிவுடன் இருக்கிறார். கொஞ்சம் கூட அந்த தம்பிக்கு தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற மமதை இல்லை.

- Advertisement -

ஒரு காட்சியில் விஜய் என்னை மரப்பெட்டியால் தலையில் அடிக்க வேண்டும். இந்த காட்சியை சண்டை இயக்குனர் விஜயிடம் கூற அவர் இதை நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அனைவரும் போய் பரவால்ல விஜய் இதை செய்யுங்கள் என்று கூறினோம்.

- Advertisement -

அதற்கு விஜய் இல்லை மிஸ்கின்சாரை நான் அப்படி அடிக்க மாட்டேன். அப்படி அடித்தாலும் அது அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.அதை நான் விரும்பவில்லை. காட்சியை வேறு மாதிரி மாற்றுங்கள் என்று கூறினார்.
ஆனால் அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. நான் விஜய்யிடம் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தேன்.

அந்த அளவுக்கு விஜய் என் மீது மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறார். லியோ திரைப்படம் நிச்சயமாக சூப்பர் ஹிட் அடையும். இதே போன்று சிவகார்த்திகேயன் என் மீது நல்ல மரியாதை வைத்திருந்தார். சிவகார்த்திகேயனுடன் பணியாற்றிய போது அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

எனக்காக  படம் செய்யுங்கள் நான் நடிக்கிறேன் என்றும் சிவகார்த்திகேயன் கூறினார். சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு ஃபார்முலா இருக்கிறது. அதற்கும் என் கதைக்கும் தொடர்பு படுத்தி ஒரு கதையை எழுதி இருக்கின்றேன். விரைவில் சிவகார்த்திகேயனுடன் நான் பணியாற்றுவேன் என்று மிஸ்கின் கூறியுள்ளார்.

Most Popular