Monday, April 7, 2025
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா"விஜய் செய்வது எல்லாம் பத்தாது" - தளபதி விஜயின் மக்கள் பணி குறித்து நடிகர் கார்த்தி...

“விஜய் செய்வது எல்லாம் பத்தாது” – தளபதி விஜயின் மக்கள் பணி குறித்து நடிகர் கார்த்தி சர்ச்சை பேட்டி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லியோ படத்தின் சூட்டிங் இல் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து வரும் நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் படம் வெளியாக இருக்கிறது . மேலும் அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் . மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் திரைப்படம் தான் அவரது கடைசி படமாக இருக்கும் எனவும் சில கருத்துக்கள் சினிமா வட்டாரங்களில் நிலவி வருகிறது. .

- Advertisement -

அதனைத் தொடர்ந்து விஜய் அரசியலில் களம் இறங்க இருப்பதாகவும் உறுதியான தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன . இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா இருக்குமோ என்று மக்கள் நம்பும் வகையில் தான் தளபதி விஜயின் சமீப கால நடவடிக்கைகள் இருந்து வருகிறது . கடந்த சில வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்ற கிளை கலைத்துவிட்டு விஜய் மக்கள் இயக்கம் என மாற்றி இருந்தார் . மேலும் கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வேட்பாளராக போட்டியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த வருடம் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இருக்கும் அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் . மேலும் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கும் மேல் ஒரு படியாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு வழங்கியதோடு அவர்களுடனும் கலந்துரையாடினார் விஜய்

- Advertisement -

அந்தக் கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுக்களின் போதும் அவரது அரசியல் வருகையை மையப்படுத்திய இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தமிழக மக்களுக்கு கல்விக்கண் திறந்த வருமான ஐயா காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர பாடசாலைகளை திறந்திருக்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். இதன் மூலம் ஏழை எளிய மக்களும் கல்வி பெரும் வகையில் பயனுள்ள திட்டமாக இது அமைந்திருப்பதாக பொதுமக்கள் முதல் அனைவரும் பாராட்டி வருகின்றனர் .

- Advertisement -

தமிழகத்தில் ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்விக்காக அகரம் பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார் நடிகர் சூர்யா. இந்த அமைப்பும் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பதற்கு உதவிகளை செய்து வருகிறது . இந்த அகரம் பவுண்டேசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யாவின் தம்பி கார்த்தி தளபதி விஜய் செய்து வரும் பணிகளை பாராட்டினார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர் ” விஜய் அண்ணா செய்து வருவது நல்ல விஷயம்தான் ஆனாலும் இது பத்தாது, ஏனென்றால் இங்கு தேவை அந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார் கார்த்திக்.

Most Popular