நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெய்லர் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் வரும் ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் சரியாக போகாததால் இந்த படத்தின் மீது அவர் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் படங்களுக்கு ஆடியோ லான்ச் பெரிய அளவில் வைக்கப்பட்டது கிடையாது.
கடைசியாக அவர் நடித்த தர்பார் திரைப்படத்திற்கு லைக்காவின் வற்புறுத்ததால் ஆடியோ லான்ச் நடந்தது. ஆடியோ லான்ச் நடைபெறுவதன் மூலம் படத்திற்கு நல்ல புரமோஷன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதில் ரஜினி பேசும் வீடியோக்களும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகும். இந்த நிலையில் ஜெய்லர் படத்திற்கு மூன்று திரைப்பட உலகமும் இணைந்து சென்னையில் சங்கமும் ஆகிறது.
அதன்படி ஜெய்லர் படத்தில் நடித்த மலையாள உலக சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் மூன்று திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ஒரே மேடையில் இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் மூலம் மலையாளம், ஆந்திரா, கனடா, தமிழ்,ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
தற்போது தமிழ் சினிமாவில் விக்ரம் தான் 440 கோடி ரூபாய் வசூல் செய்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த வசூலை ரஜினிகாந்த் முறியடிப்பாரா என எதிர்பார்ப்புஎழுந்துள்ளது. இதனால் ஜூலை 28-ம் தேதியை நோக்கி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.