Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வன் கதை தொடர்பாக இயக்குனர் மணிரத்தினத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

பொன்னியின் செல்வன் கதை தொடர்பாக இயக்குனர் மணிரத்தினத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் . நாயகன் தளபதி ரோஜா பம்பாய் குரு ஓ காதல் கண்மணி போன்ற வெற்றி படங்களை தமிழ் மற்றும் இந்திய சினிமாவிற்கு வழங்கியவர் . கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . பழம்பெரும் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதனை இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்தார் மணிரத்தினம் .

- Advertisement -

அதன் முதல் பாகமானது கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியது . இந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி சரத்குமார் பிரபு பார்த்திபன் பிரகாஷ் ராஜ் விக்ரம் பிரபு ஜெயராம் கிஷோர் ஐஸ்வர்யா ராய் திரிஷா ஐஸ்வர்யா லட்சுமி என பெரிய நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்திருந்தனர் . இந்தப் படமானது சென்ற ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக வசூலில் சாதனை படைத்தது .

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் பட குழுவ அறிவித்திருக்கிறது ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் . பொன்னியின் செல்வன் நாவலானது சோழர் கால வரலாற்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல் . அந்த நாவலை தழுவி தான் திரைக்கதை அமைத்து படமாக எடுத்திருக்கிறார் மணிரத்தினம்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான போதே சில சர்ச்சைகள் வந்தன . மணிரத்னம் வரலாற்றை திரிபு செய்கிறார் என்று . இது தொடர்பாக திரைத்துறையைச் சார்ந்தவர்களும் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் மணிரத்தினத்திற்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர் . அவர் தமிழர்களின் வரலாற்றை மாற்றம் செய்கிறார் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் சர்ச்சை வந்தது .

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் சென்னையைச் சார்ந்த வழக்கறிஞர் எல் கே சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்து இருக்கிறார் . அந்த வழக்கில் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் படக் குழுவினர் சோழ வம்சத்தின் வரலாற்றை திரிபு செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் .

அந்த மனுவில் ” வரலாறு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று.வணிக நோக்கங்களுக்காக வேண்டுமென்றே மத்திய மாநில அரசுகளால் பாதுகாக்கப்படும் ஒரு வரலாற்றை இழிவுபடுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறி இருக்கிறார். மேலும் அந்த மனுவில் நாட்டின் தொல்லியல் செயல்பாடுகள் மற்றும் வரலாற்றை பராமரித்து ஒழுங்குபடுத்தும் பொறுப்பில் இருக்கும் இந்திய அரசின் தொல்லியல் துறையும் இயக்குனர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் . ஆனால் அவை தவறிவிட்டன . 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொல்பொருள்கள் மற்றும் கலை புதையல் சட்டம் 1958 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிரதான நினைவுச் சின்னங்கள் புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்களுக்கான சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தவறி விட்டனர். என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றை எந்த விதத்திலும் திரிப்பது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் செயல் என குறிப்பிட்டுள்ள அவர் தொல்லியல் துறை மற்றும் தணிக்கை குழு இந்த விஷயத்தில் முறையான நடவடிக்கை எடுக்க தவறியதால் உயர் நீதிமன்றத்தை நாடி இருப்பதாக மனுதாரர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Most Popular