சினிமா

“முக்கிய செய்தி: சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்” … காவல்துறை தீவிர விசாரணை!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த் இவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள். இவர்களில் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார் . அதனைத் தொடர்ந்து 17 வருட இவர்களது திருமண வாழ்க்கை கடந்த வருடம் முடிவிற்கு வந்தது . இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்றாலும் மனம் விட்டு பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான மூணு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் மற்றும் விவேக் நடிப்பில் வெளியான வை ராஜா வை என்ற திரில்லர் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் இவர். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக நன்கு அறியப்பட்டவர். திருமண வாழ்க்கையில் இருந்து விலகிய நிலையில் தற்போது தனது இயக்குனர் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . இவரது இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கும் படம் நான் சலாம்.

Advertisement

இந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தி திரைப்படத்தில் ஒரு முன்னணி வேடத்தில் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு அனுப்பப்பட படிப்புகள் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தப் பட வேலைகளிலும் தனது உடற்பயிற்சிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த சூழ்நிலையில் அவரது வீட்டில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது.

தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு இல்லத்தில் வசித்து வந்தார் . இந்நிலையில் அவரது வீட்டில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவர் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் திருட்டு நடைபெற்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

இச்சம்பவம் பற்றி வெளியான தகவல்களின்படி அவரது வீட்டில் இருந்து அறுபது சவர நகைகள் மற்றும் நவரத்தின கற்கள் வரை திருட போயிருக்கின்றன. இவற்றின் மதிப்பு மட்டும் 60 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது வீட்டில் வேலை செய்த மூன்று பணியாளர்கள் மீதுதான் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top