சினிமா

உடல்நலக் குறைவால் தவிக்கும் சமந்தாவுக்கு ராகுல் ரவீந்திரனின் சர்ப்ரைஸ் பரிசு ! அசந்துபோன சமந்தா !

தமிழ் சினிமா மட்டுமல்லாது  தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில்  பிரபலமாக இருப்பவர்  நடிகை சமந்தா . தமிழில்  மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இவர் தெலுங்கில்  விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின்  தெலுங்கு  பதிப்பில்  நடித்தார் . அந்தப் படம் ஒரு வெற்றியை பெற்றது  அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும்  பிரபலமான நடிகையாக  வலம் வந்தார் .

இவரும்  தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன்  நாகா சைதன்யாவும்  காதலித்து திருமணம் செய்து கொண்டனர்  இருவரும்  சொந்த காரணங்களால்  சில நாட்களுக்கு முன்பு  விவாகரத்து செய்து கொண்டனர் .

இதன் பின்பு தனது  நடிப்புக்கேரியரில்  கவனம் செலுத்தி வந்த  சமந்தா  ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக  தனது பிட்னஸ் லெவலை  வைத்திருந்தார் . இவரது ஆட்டத்தில் உருவான  ஓ சொல்றியா மாமா பாடல்  புஷ்பா படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்தது என்றால்  அது மிகையாகாது .

இப்படி புகழின் உச்சியில் இருந்த சமந்தாவுக்கு  எதிர்பாராத விதமாக  மையோசைடிஸ் என்ற  நோய் தாக்கியது . இதற்காக அவர் தற்பொழுது சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் . இந்நிலையில்  சமந்தாவின் முதல் பட இயக்குனரும்  பாடகி சின்மயி அவர்களின் கணவருமான  ராகுல் ரவீந்திரன் அவர்கள்  ஒரு சிறப்பு பரிசு ஒன்றை  சமந்தாவுக்கு வழங்கியுள்ளார் . இந்தப் பரிசின் புகைப்படத்தை  தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமந்தா ” நன்றி ராகுல்  இந்த பரிசு எனக்கு மட்டுமல்ல  என்னைப் போன்று வாழ்க்கையில் போராடி  வெற்றி பெற இருக்கும் எல்லாருக்கும் ஆனது  என்று  ராகுல் ரவீந்திரனை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

அந்தப்  பரிசானது  ஒரு புகைப்படம் ஆகும்  அதில் ராகுல் ரவீந்திரன் அவர்கள்  சமந்தாவை  இரும்புப் பெண் என்று குறிப்பிட்டுள்ளார் . மேலும் அவரது போராட்ட குணத்தை  வெகுவாக பாராட்டி  அதில் எழுதியுள்ளார்.

அந்தப் பதிவில் ராகுல் அவர்கள் ” ஸாமி.. இரும்பு மனிதியே..! இருள் சூழ்ந்த குகையின் முடிவு நம் கண்களுக்கு புலப்படாதக் காரணத்தினால் அந்த குகைக்கு முடிவில்லை என்று அர்த்தமாகாது. அந்த குகைக்குள் வெளிச்சம் வர வாய்ப்பில்லை என்று சத்தியம் செய்கிறார்கள் ஆனால் இரும்பு மனிதியே வலி மிகுந்த இந்த பாதை வழியே நீ மிகுந்த போராட்டத்துடன் உன்னால் முயன்ற அளவுக்கு பயணித்துக் கொண்டிருக்கிறாய்.
என்னதான் உனக்குள் குழப்பங்களும் பயங்களும் நிரம்பி இருந்தாலும் இரும்பு மனிதியான‌ நீ ஒரூ வீரனைப் போல் எதிர்த்து போராடி எதிர்த்துக் கொண்டிருக்கிறாய். இரும்பு மனிதியே இதிலும் வெற்றி அடைவாய் இது உன் பிறப்புரிமையாகும். தொடர்ந்து போராடி நடந்துக் கொண்டே இரு விரைவில் இந்த இருள் சூழ்ந்த குகைக்குள் சூரிய வெளிச்சத்தை காண்பாய். நீ தோற்றுப்போக மாட்டாய், இந்த காலதாமதம் எல்லாம் பரவாயில்லை, தோற்றுவிட்டோம் என்று நினைப்பவர்கள் உன்னை போன்ற வீரனை போல் வெற்றி காண மாட்டார்கள். எது உன்னை தோற்கடிக்க நினைக்கிறதோ அது வே உன் பலத்தை மேம்படுத்தும் மேலும் மேலும்.அதி உறுதியாக.! என்று அந்த புகைப்படத்தில் எழுதியுள்ளார் .

இது நடிகை சமந்தாவுக்கு மட்டுமல்லாது வாழ்வில் போராட்டத்தின் மூலம் வெல்ல நினைக்கும் எல்லா பெண்களுக்கும் ஒரு ஊக்கமளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top