Friday, December 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிடாமுயற்சி படத்துக்கு எல்லாம் கூடி வரும் நேரத்தில் ஷூட்டிங்க்கு வர மறுத்த அர்ஜுன்.. பெரிய சிக்கலில்...

விடாமுயற்சி படத்துக்கு எல்லாம் கூடி வரும் நேரத்தில் ஷூட்டிங்க்கு வர மறுத்த அர்ஜுன்.. பெரிய சிக்கலில் படக்குழு.. !

அஜித்குமாரின் 61வது படமாக விடாமட்சி அமைந்துள்ளது. அவருக்கு 61வது படம் சற்றும் சரியாக போகவில்லை. துணிவு படத்துக்கு பிறகு கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனுடன் ஒப்பந்தம் ஆன படம் கைவிடப்பட அவரது இடத்தில் வந்தார் இயக்குனர் மகிழ் திருமேனி. அது தான் விடாமுயற்சி. அதுவும் இன்றளவும் சிக்கலில் ஒரு இளுபரியாகவே உள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டு மே மாதம் இப்படத்தின் அறிவிப்பு வந்தது. அதன் பின்னர் அந்த வித சத்தமும் இல்லை. இந்த வாரம், அடுத்த வாரம் என படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் லைகா நிறுவனம் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ள அஜித்தின் விடாமுயற்சி படம் அப்படியே தேங்கிவிட்டது.

இதுவரை படக்குழு அஜர்பைஜானில் ஓரளவு 60% படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. அஜித் கொடுத்த தேதிகளை லைகா நிறுவனம் வீணடித்ததால் அஜித் உடனே அடுத்தப் படத்துக்கு நகர்ந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படமாக அது அமைந்தது. இதன் ஷூட்டிங்கை அவர் துவங்கி முதல் அட்டவணையை நிறைவு செய்துவிட்டார்.

- Advertisement -

மறுபக்கம் லைகா நிறுவனம் அஜித்தை மீண்டும் அழைத்து இந்த முறை படத்தை முடித்துவிடலாம் என உறுதியளித்து. அஜித்தும் விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு ஆதிக் படத்தின் இரண்டாவது அட்டவணையை தொடரலாம் என எண்ணி சம்மதம் தெரிவித்தார். இந்த மாதம் கடைசி வாரத்தில் ஷூட்டிங் துவங்கி அடுத்த ஒரு மாதத்தில் நிறைவு செய்ய திட்டம் தீட்டினர்.

- Advertisement -

ஆனால் அதற்க்கு மற்றொரு சிக்கல் தற்போது வந்துள்ளது. படத்தில் அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் வருகின்றனர். பெரும்பாலான காட்சிகளில் அவர்கள் ஒன்றாக இருப்பது போல உள்ளதால் அனைவரும் அடுத்த ஒரு மாதத்துக்கு தேவைப்படுகிறார்கள். இந்த நிலையில் அர்ஜுன் ஷூட்டிங்க்கு மறுப்புத் தெரிவித்தார்.

காரணம் அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகனுக்கும் விரைவில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இத்தகு நேரத்தில் அவர் எப்படி ஷூட்டிங் வருவது எனக் கேட்டு, அதனை தள்ளி வைக்கக் கேட்டுள்ளார். ஆனால் அஜித் கொடுத்த நேரம் அடுத்த ஒரு மாதம் தான். இதில் அவரை விட்டால் இதோடு குட் பேட்‌ அக்லி படத்திற்குப் பிறகு தான் பிடிக்க முடியும்.

லைகா நிறுவனமோ விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கு வெளியிட நினைக்கிறார்கள். தற்போது இப்படம் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் இந்த மாதம் திட்டம் செய்தது போல ஷூட்டிங் துவங்காது என செய்திகள் வருகின்றன. அர்ஜுன் பெரிய மனது வைத்து தன் காட்சிகளை மட்டும் விரைந்து நடித்துக் கொடுத்துவிட்டு சென்றால் மட்டுமே விடாமுயற்சி படம் நகரும்.

Most Popular